NIA special court judge Ravinder Reddy had resigned citing personal reasons on the same day as when he had acquitted ten accused in the 11-year-old Mecca Masjid blast case.
Delhi High Court directs DGCA to outline maximum flying hours for pilots
A bench of Acting Chief Justice Gita Mittal and Justice C Hari Shankar said the DGCA was bound to comply with the provisions under the Aviation Act and Rules so far as the issue of fatigue of pilots is concerned and to specify maximum and minimum of flying time.
No views yet
Independent probe in Justice Loya death case? SC may decide today
The Supreme Court had earlier asked the Maharashtra Government to submit the postmortem report of the CBI judge, who was hearing the high-profile Sohrabuddin Sheikh fake encounter case at the time of his death.
No views yet
Pathankot on high alert after two armed men hijack car
Two men in Army uniforms reportedly hijacked a Maruti Suzuki Alto before panicking and fleeing – leaving the car in the middle of the road.
No views yet
SC rejects pleas seeking SIT probe in Judge Loya death case, says he died of natural causes
The court said that there no reason to disbelieve the Judicial Officers in the Judge Loya death case.
No views yet
BJP has wounded India`s soul by unleashing intolerance and hatred: Shashi Tharoor
Congress MP and former Union minister Shashi Tharoor on Wednesday accused the ruling Bharatiya Janata Party (BJP) of “wounding” India’s soul by “unleashing forces of intolerance, hatred and bigotry”. Such a climate did not prevail in the past, he said during an interaction organised here by the All India Professionals Congress (APIC), of which he is the chairman.
No views yet
“பெண்ணென்று வந்து விட்டால், லஷ்மி… கனிமொழி இருவருக்கும் பேசுவேன்!” – வானதி
”ஸ்பெக்ஸ் ரொம்ப அழகா இருக்கு. இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க” – சில நாள்களுக்கு முன்புதான் அமைச்சர் விஜயபாஸ்கர், பெண் நிருபர் ஒருவரிடம் இப்படி பேசினார். இந்தப் பிரச்னை ஓய்ந்திருந்த வேளையில், தமிழக ஆளுநர் அடுத்து ஆரம்பித்து வைத்திருக்கிறார். கேள்வி கேட்ட பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டியது, அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையில் கனிமொழி பற்றிய ஹெச்.ராஜாவின் பதிவு எனப் பொதுவெளியில் இயங்கும் பெண்களிடம், ஆண்கள் நடந்துகொள்ளும் விதம் மிகவும் அபாயகரமாக இருக்கிறது. இந்நிலையில். ‘பெண்கள் அரசியலுக்கும் பொதுவாழ்வுக்கும் வந்தால், அவர்களை மலினப்படுத்துவதும் கீழ்த்தரமாக விமர்சிப்பதும் கவலைக்குரிய வகையில் அதிகரித்து இருக்கிறது. இதற்குச் சம்பந்தப்பட்ட பெண்களின் தகுதி, பதவி, கல்வியறிவு எதுவுமே தடைபோட முடியவில்லை. பெண்களை நுகர்வுப் பண்டமாகப் பார்க்காமல், சக மனுஷியாக, தாயாக, மகளாக, சகோதரியாக, தோழியாகப் பாருங்கள்’ எனத் தமிழ்நாடு பா.ஜ.க.வின் மாநில பொதுச் செயலாளர், வானதி சீனிவாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூடாகப் பதிவிட்டுள்ளார். இது, கனிமொழிக்காக ஆதங்கப்பட்டு எழுதியதா? அவரிடமே கேட்டோம்.
“கனிமொழியை அப்படிச் சொன்னது தப்பு. ஒரு பெண்ணை அப்படிச் பேசியதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கனிமொழிக்கு மட்டுமல்ல, ஜோதிமணியிடம் அநாகரிகமாகப் பேசியதும் தவறுதான். இந்த அநாகரிகங்களை எந்த விதத்திலும் அனுமதிக்கவே முடியாது” என்று அழுத்தம் திருத்தமாகப் பேச ஆரம்பித்தார், வானதி சீனிவாசன்.
“புதிதாகப் பொதுவெளிக்கு வரும் பெண்களை மிரட்டும் அளவுக்குத்தான் இன்றைய சமுதாயம் இருக்கிறது. போராட்டத்துக்கு வரும் பெண்ணின் இடுப்பைக் கிள்ளுகிறார்கள். இடுப்பைக் கிள்ளிய கட்சிக்காரன் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? ஸ்டாலின் அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டாரா? உங்கள் வீட்டுப் பெண் என்றால் பொங்குவீர்கள். கட்சிக்காரப் பெண் என்றால், அமைதியாக இருப்பீர்களா?” என்ற வானதியின் வார்த்தைகளில் ரெளத்திரம் தெறிக்கிறது.
“பெண்களுக்கு எதிரான வசவு வார்த்தைகள் நம் சமூகத்தில் புதிதான விஷயமில்லை. ஜெயலலிதாவைப் பேசாத பேச்சா? எந்த அளவுக்குப் பெண்களை கேவலமாகப் பேசமுடியுமோ அந்த அளவுக்குப் பேசினார்கள். பொதுவாழ்வில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, சராசரி பெண்களாக இருந்தாலும் சரி, நாம்தான் தைரியம் பழக வேண்டும். பாரதியார் கவிதைகளைத் துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள். சக பெண்களுக்கு ஓர் ஆபத்து வருகிறது என்றால், குறைந்தபட்சம் குரலையாவது உயர்த்துங்கள். உங்கள் அலுவலகத்தில் இப்படி ஒரு பெண்ணுக்கு நடக்கும்போது, ஆதரவாக இருங்கள். மனதளவில் அவளுக்குத் தைரியம் கொடுங்கள்.
நீங்கள் அம்மாவாக இருந்தால், ‘பெண்ணை உடலாகப் பார்க்காதே. அவள் சக உயிர். அவளும் உன்னை மாதிரியே சமுதாயத்தில் வாழப் பிறந்தவள்’ என்று ஆண் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுங்கள். சுவாதி கொலைக்குப் பிறகு, வெளியூரிலிருந்து பெண்களை வேலைக்கு அனுப்பவே பெற்றோர்கள் பயந்தார்கள். நிர்பயாவுக்குப் பிறகு பயணம் செய்ய பயந்தார்கள். ஆனாலும், பெண்களின் முன்னேற்றம் இந்த மாதிரியான குற்றச் செயல்களால் நின்றுவிடப் போவதில்லை. ஆனால், வேகத்துக்கு ஒரு தடைக்கல்லாக மாறும்” என்று வருத்தப்பட்ட வானதி சீனிவாசனிடம், ஆளுநர் பன்வாரிலால் விவகாரத்தை எடுத்தோம்.
“ஆளுநர் விஷயத்தை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், தனிப்பட்ட முறையில் அந்தப் பெண்ணை அறைக்கு அழைத்துச்சென்று கீழ்த்தரமான எண்ணத்தில் எதுவும் செய்யவில்லை. அத்தனை கேமராக்கள் முன்னிலையில்தான் கன்னத்தை தட்டிவிட்டுச் சென்றார். ஆனாலும், அதில் சம்பந்தப்பட்ட நிருபர் லஷ்மிக்கு விருப்பமில்லை என்றால், அது தவறுதான். பெண்ணின் அனுமதியின்றி, அவளுக்கு உயிர் கொடுத்த அப்பாவாக இருந்தாலும், தொடக்கூடாது. வயசுக்கு வந்துவிட்டாலே அப்பாவே நம்மிடம் அதிகம் நெருங்க மாட்டார் என்பதுதான் நம் கலாசாரம், பண்பாடு. அந்தப் பெண்ணின் அனுமதியின்றி, அவர் தொட்டது தவறுதான். .ஆனால், அதற்காக ஆளுநர் மன்னிப்பும் விளக்கமும் கொடுத்த பிறகும் இவ்வளவு பெரிய அரசியலாக்குவது சரியா? அந்த நிருபருக்குக் குரல் கொடுத்ததுபோலவே மற்றப் பெண்களுக்கும் குரல் கொடுப்பீர்களா? ஒரு ஆண் மகனைத் திட்டுவதற்கும் அம்மா, மனைவி, அக்கா, தங்கையை இழுக்கும் சமுதாயம் இது. மீண்டும் சொல்கிறேன். அந்த நிருபரின் அனுமதியின்றி தொட்டது தப்புதான். அதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், மற்றக் கட்சிகள் அந்தப் பெண்ணை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கின்றன. தயவுசெய்து பெண்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்” என்று முடித்தார் வானதி சீனிவாசன்.
No views yet
Check biharboard.ac.in for BSEB 10th and 12th results 2018; announcement likely in May
The results of Class 10 and Class 12 examinations conducted by Bihar School Examination Board (BSEB) 2018 are expected to be declared in the first week of May. Once the results are out, they will be available on the official website of Bihar School Examination Board (BSEB) – biharboard.ac.in. As per reports, the results of BSEB 2018 intermediate exams for arts, science and commerce will be announced at least three to four days prior to the declaration of results of matriculation exams.
No views yet
Owaisi calls NIA blind and deaf, vows to help families of Mecca Masjid blast victims
Owaisi has said that if family of any of the victims of the 2007 Mecca Masjid blast in Hyderabad wants to appeal against the verdict in the case, he would provide all legal help to them.
No views yet
Mr. Punit Goenka honoured with `Outstanding Contribution to Media` Award at AIMA Managing India Awards 2018
The AIMA Awards facilitates outstanding achievers who have made a fundamental difference in the industry setting new benchmarks and created an edge above peers for others to emulate.
No views yet
Chandrababu Naidu`s fast on birthday triggers row, Jagan Reddy says he is cheating Andhra
Accusing Naidu of cheating the people of Andhra Pradesh, Reddy had said he should have instead made all his MPs resign over special status to the state.
No views yet
நிர்மலா தேவி வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி தலைவர் 24 மணி நேரத்துக்குள் மாற்றம் ஏன்? ராமதாஸ் பகீர் காரணம்
நிர்மலா தேவியின் பாலியல் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன் என கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டதுகுறித்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி, அரசு உத்தரவிட வேண்டும் என வலியுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “;பல்கலைக்கழக நிர்வாகத்திலுள்ள பெரிய மனிதர்களின் தேவைகளுக்காக கல்லூரி மாணவிகளுக்கு பாலியல்வலை வீசப்பட்டதுகுறித்த வழக்கு, தமிழ்நாடு கமுக்கக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சி.பி.சி.ஐ.டி) மாற்றப்பட்ட 24 மணி நேரத்துக்குள், அப்பிரிவின் தலைவரும், கூடுதல் தலைமை இயக்குநருமான ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பாலியல்வலை வழக்கின் குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆளுநர் மாளிகையுடன் இணைந்து அரசும் சதிசெய்வது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு கமுக்கக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி.பி.சி.ஐ.டி) கூடுதல் தலைமை இயக்குநராக இருந்த ஜெயந்த் முரளி, ஒப்பீட்டளவில் நேர்மையான அதிகாரி ஆவார். அவரது மேற்பார்வையில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் தொடர்பாக மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அவற்றைப் புறக்கணித்து குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுப்பது அவரது வழக்கமாகும். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளுக்கு, அதே கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் வலைவீசியதுகுறித்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அப்பிரிவின் தலைவராக ஜெயந்த் முரளி நீடித்தால், பாலியல்வலையின் பின்னணியில் இருப்பவர்கள் அடையாளம் காணப்படலாம். இந்த விவகாரத்தில், ஆளுநர் மாளிகைக்கு உள்ள தொடர்புகள்குறித்து விசாரிக்கப்படலாம் என்பதாலேயே, சி.பி.சி.ஐ.டி பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் பதவியிலிருந்து ஜெயந்த் முரளி நீக்கப்பட்டுள்ளார். சுருக்கமாகக் கூற வேண்டுமானால், பாலியல் வலை வழக்கை குழிதோண்டிப் புதைக்க சதி நடக்கிறது.
சி.பி.சி.ஐ.டி-யின் புதிய கூடுதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அம்ரேஷ் பூஜாரியின் கடந்த காலம், சர்ச்சைகள் நிறைந்ததாகும். முந்தைய ஜெயலலிதா ஆட்சியில், உளவுத்துறை தலைவராக இருந்த அம்ரேஷ் பூஜாரி, அவர் மீது புகார்கள் எழுந்ததை அடுத்து அப்பதவியிலிருந்து 2015-ம் ஆண்டு மாற்றப்பட்டார். பேராசிரியை மீதான பாலியல்வலை வழக்கிற்கு முடிவுகட்ட இவர்தான் சிறந்தவராக இருப்பார் என்ற நம்பிக்கையில்தான் சிபிசிஐடி-யின் தலைவராக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பெரிய மனிதர்களின் தேவைக்காக ஏழை மாணவிகளைப் பலிகொடுக்க முயன்ற வழக்கு, அருப்புக்கோட்டை காவல் நிலையத்திலிருந்து சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டபோதே, அந்த வழக்கை கிடப்பில் போட முயற்சிகள் நடப்பதாகக் குற்றஞ்சாற்றியிருந்தேன். ஆனால், இப்போது அந்த வழக்கிற்கு நிரந்தரமாக முடிவுகட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு கட்டமாகவே, சி.பி.சி.ஐ.டி-யின் தலைவர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். பாலியல்வலை வழக்கில், இப்போது பல்வேறு புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. நான்கு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல்வலை வீசியதாக நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல கல்லூரி மாணவிகளுடன் வாட்ஸ்அப்பில் பேசி, பாலியல் அழைப்பு விடுத்ததற்கான புதிய ஆடியோ பதிவுகள் வெளியாகியுள்ளன. அதில், அவர் கூறியுள்ள தகவல்களும் வழிநடத்தல்களும் சீரழிவின் உச்சம் ஆகும். பாலியல் உலகின் பிரதிநிதியைப் போன்று பேசும் நிர்மலா தேவியை மாணவிகள் கடுமையாக எச்சரிக்கும்போதிலும், அவர் தளராமல் முயற்சியைத் தொடர்கிறார். அந்த அளவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலுள்ள தனது எஜமானர்களிடம் எதையோ சாதித்துக்கொள்வதற்காக மாணவிகளைப் பலிகொடுப்பதில் நிர்மலா தேவி தீவிரம்காட்டியுள்ளார்.
நிர்மலா தேவி பாலியல்வலை வீசியதன் பின்னணியில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் உள்ளிட்ட பெரிய மனிதர்கள் உள்ளனர் என்பதைத்தான் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள் உறுதிசெய்கின்றன. இந்த விஷயத்தில், காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், நாகரிகம் கருதி வெளியில் சொல்ல முடியாதவை. பல்கலைக்கழகங்கள் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் தமக்கே என்று கூறிக்கொள்ளும் ஆளுநர், இந்த விஷயத்தில் தலையிட்டு, கேவலமான செயல்களில் ஈடுபட்ட காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், அவரது அதிகாரத்துக்கு ஒரு மரியாதை இருந்திருக்கும். ஆனால், சம்பந்தப்பட்டவர்களைத் தமக்கு அருகில் அமர்த்திக் கொண்டு, ஆளுநர் செய்தியாளர்களைச் சந்தித்ததுதான் ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தீர்க்கப்பட வேண்டும்.
அதற்கு, சி.பி.சி.ஐ.டி விசாரணை எந்த வகையிலும் உதவாது. மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணை மூலமாகவே, பாலியல்வலை அத்தியாயத்தின் பின்னணியில் உள்ள அத்தனை பெரிய மனிதர்களையும் அம்பலப்படுத்த முடியும். தமிழகத்திலுள்ள பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அச்சமின்றி பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்க இது மிகவும் அவசியமாகும். எனவே, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல்வலை வீசப்பட்டதுகுறித்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி, அரசு உத்தரவிட வேண்டும்”; என வலியுறுத்தியுள்ளார்.
No views yet
முதலில் துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை- அதிகாரி சந்தானம் தகவல்
“;முதல்கட்டமாக காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை மற்றும் பதிவாளர் சின்னய்யா உள்ளிட்ட நபர்களை விசாரிக்க உள்ளேன்”; என்று விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்தார். மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 12 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலாதேவி தன் உயிருக்கு ஆபத்து என தனது வழக்கறிஞரிடம் கதறி அழுதுள்ளார். இந்நிலையில் நிர்மலாதேவி தொடர்பான விசாரணை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் இன்று மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள அரசு சுற்றுலாமாளிகையில் விசாரணை தொடங்கியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”முதல்கட்டமாக காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை மற்றும் பதிவாளர் சின்னய்யா உள்ளிட்ட நபர்களை விசாரிக்க உள்ளேன். நாளை அருப்புக்கோட்டை செல்ல உள்ளேன். கல்லூரி மாணவிகளிடம் விசாரிப்பது தொடர்பாகவும் விசாரணை குழுவில் பெண் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும். சிறைக்கு சென்று நிர்மலாதேவியிடம் விசாரிக்கப்படும்” என தெரிவித்தார் .
No views yet
'பசுத்தோல் போர்த்திய புலிகளைக் கண்டுபிடிக்கணும்'- நிர்மலா தேவி விவகாரத்தில் விஜயகாந்த் வலியுறுத்தல்
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்குறித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணைப் பேராசிரியையாகப் பணிபுரியும் நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்திருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது, உலக அளவில் உள்ள தமிழர்களின் தன்மானத்துக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலா தேவி எந்தத் தைரியத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார் என்பதைச் சமூக வலைதளங்களின்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
மாணவிகளைச் சரியாக வழிநடத்தவேண்டிய ஆசிரியையே இது போன்ற செயல்களைச் செய்வது, ‘வேலியே பயிரை மேய்வது’ போல உள்ளது. நிர்மலா தேவியின் பின்னணியில் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் இருப்பார்களோ எனும் சந்தேகம் எழுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் தாமாக முன்வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்திருப்பது, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழியையே நினைவுபடுத்துகிறது. ஆளுநர், ‘எனக்கு 78 வயதாகிறது; எனக்கு பேரன், பேத்திகள் எல்லாம் உள்ளனர்’ எனத் தானாகக் கூறுவது சந்தேகத்தையும் எண்ணற்ற கேள்விகளையும் எழுப்புகிறது.
தமிழகத்தின் மூத்த குடிமகனாக இருக்கும் ஆளுநர், பத்திரிகையாளரின் கன்னத்தைத் தொட்டது அநாகரிகத்தின் உச்சம். எந்தப் பயமும் இன்றி நள்ளிரவில்கூட ஒரு பெண் தனியாக வெளியில் செல்லும் நிலை வரும்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம். ஆனால் இங்கு, சிறுமிகள், மாணவிகள், பெண்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற செயல்களைத் தடுத்துநிறுத்த, கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும். பேராசிரியை நிர்மலா தேவிக்கு கிடைக்கக்கூடிய தண்டனை, எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்ற எண்ணத்தை உருவாக வேண்டும். தமிழக அளுநரே சந்தேக வளையத்துக்குள் இருபதால், சிபிஐ கூட இதை நேர்மையாக விசாரிக்குமா என்பது சந்தேகம்தான். நிர்மலா தேவின் பின்னணியில் உள்ள ‘பசுத் தோல் போர்த்திய புலிகள்’ போன்ற சக்திவாய்ந்த அதிகாரம் மிக்க நபர்கள் எல்லோரையும் கண்டறிய, நீதிமன்றமே தாமாக முன்வந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைக்கொண்ட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
No views yet
’'கண்ணுங்களா… டீம் பிரிச்சுக்குவோமா..?!’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்
பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுடன் பேசிய செல்போன் ஆடியோவைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் சாட்டிங் இந்த வழக்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரத்தில், புற்றீசல்போல தோண்டத் தோண்ட புதுப்புது தகவல்கள் தினமும் வெளியாகிவருகின்றன. மாணவிகளிடம் செல்போனில் பேசும் நிர்மலா தேவியின் உரையாடலைத் தொடர்ந்து, அவர் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்த தகவலும் வெளியாகிக் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் நிர்மலா தேவிக்கு எதிரான ஆவணங்களாக நீதிமன்றத்தில் போலீஸார் சமர்பிக்க உள்ளனர்.
இதற்கிடையே, அருப்புக்கோட்டை நகர போலீஸாரிடமிருந்த நிர்மலா தேவியின் வழக்கு, சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி.,முத்து சங்கரலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க, ஏழு டீம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை, இன்று முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களில், நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் சாட்டிங்கைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக விசாரிக்க, நிர்மலா தேவியை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “;நிர்மலா தேவியின் போன் உரையாடல், வாட்ஸ்அப் சாட்டிங் ஆகியவைகுறித்து அவரிடம் விசாரிக்க முடிவுசெய்துள்ளோம். சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவிகளுடன் நிர்மலா தேவி மார்ச் முதல் வாரத்தில் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்துள்ளார். அதில், ‘பிஎன் மேடம் 2’ என்று நிர்மலா தேவியின் பெயரை மாணவி ஒருவர் தன்னுடைய செல்போனில் பதிவுசெய்துள்ளார்.
அதில் பல தகவல்கள் இருந்தாலும், வழக்குத் தேவையானவற்றை மட்டும் நாங்கள் சேகரித்துள்ளோம். ”கண்ணுங்களா டீம் பார்ம் பண்ணுவோமா” என்று ஆரம்பிக்கிறது அந்த வாட்ஸ்அப் சாட்டிங். அதற்கு மாணவி, ”மேடம் வெளியில் போகும்போதுகூட நீங்கள் வாரீங்களா, அமைதியா சாதிப்போம்” என்று பதில் சொல்கிறார். அதன்பிறகு நடக்கும் உரையாடல்கள்தான். இந்த வழக்குக்கு முக்கிய ஆவணமாக உள்ளது.
”வெற்றிக்கு திறமை மட்டும் போதாது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்திச்சாலித்தனமாக செயல்பட வேண்டும். நான் சொல்வது உங்களுக்குப் புரிந்தால், குட் மார்னிங் என்று ஆங்கிலத்தில் கேப்பிட்டலில் எனக்கு மெஸேஜ் அனுப்பவும். படிப்பிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களுக்கு நான் வழிகாட்டுவேன்” என்று நிர்மலா தேவி உரையாடுகிறார். அதோடு, ”வாட்ஸ்அப்பில் டி.பி-யில் உங்களின் அழகான புகைப்படங்களை வையுங்கள்” என்றும் கூறுகிறார். இதற்கு மாணவிகள், எதிர்த்து பதிலளித்துள்ளனர்.
மேலும், ”அதிர்ஷ்டம் கதவை தட்டும்போது தவறவிட வேண்டாம்” என்றும் நிர்மலா தேவி குறிப்பிடுகிறார். மாணவிகளுக்கும் நிர்மலா தேவிக்கும் நடந்த இந்த வாட்ஸ்அப் சாட்டிங்கில், பேராசிரியையின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு எதிர்ப்பைக் காட்டிய மாணவிகளிடம், ”இந்தத் தகவலை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்” என்றும் அட்வைஸ் செய்துள்ளார். கடைசியாக, ”யோசி… யோசி” என்று மீண்டும் மாணவிகளிடம் சொல்கிறார். இதுபோல பல வாட்ஸ்அப் உரையாடல்கள் எங்களிடம் உள்ளன. அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்த உள்ளோம். கல்லூரி நிர்வாகத்திடமும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடமும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். ‘கண்ணுங்களா டீம் பார்ம் பண்ணுவோமா’ என்று நிர்மலா தேவி வாட்ஸ் அப்பில் சொல்லியிருப்பதால், அந்த டீம் குறித்தும் விசாரிக்கப்படும்”; என்றார்.
இதற்கிடையில், சிறையில் உள்ள நிர்மலா தேவியை அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் சந்தித்துப் பேசினார். பிறகு அவர் கூறுகையில், “;நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் பேசியதாக வெளியான ஆடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் உண்மை தெரியவரும்”; என்றார்.
No views yet
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதம்!
நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு நினைவுபடுத்தும் விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், வரும் 23-ம் தேதி முதல் சென்னையில், தங்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், பல்வேறு பிரிவுகளும் பலதரப்பட்ட சங்கங்களும் இருக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை, ஜாக்டோ-ஜியோ அமைப்பில் ஒருங்கிணைந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்துவது வழக்கம். சில அமைப்புகள் அதில் சேராமல் தாங்களாகவே சுயமாக, தனித்துப் போராடுவதும் வழக்கம். அப்படியொரு அமைப்புதான் தற்போது சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதற்காக, தங்களது குடும்பத்துடன் சென்னையை நோக்கி ஏப்ரல் 22-ம் தேதி படையெடுக்க உள்ளனர். மறுநாள் காலை முதல், அதாவது, 23-ம் தேதி முதல் சென்னையிலுள்ள டிபிஐ வளாகத்தில், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறார்கள். 30.6.2009-ம் தேதிக்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முந்தைய மாதத்தில் (31.05.2009) பணி நியமனம்செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஊதிய முரண்பாடு பெரிய அளவில் இருக்கிறது. ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி. ஆனால், சம்பளத்தில் மட்டும் ஏன் இந்த இமாலய வித்தியாசம்? அதை, உடனடியாகக் களைய வேண்டும் என்பதுதான் இந்தப் பிரிவு இடைநிலை ஆசிரியர்களின் கேள்வி. இதற்காக, இவர்கள் கடந்த 9 வருடங்களாக தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இது இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போவதில் மனம் வெறுத்துதான், தங்களின் இறுதி முயற்சியாக குடும்பத்துடன் சாகும் வரை போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் இயக்க மாநில பொதுச் செயலாளரான ராபர்ட், “;தமிழகத்தில் 6- வது ஊதியக் குழு அமல்படுத்தும் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 22 ஆண்டுகளாக வழங்கப்பட்டுவந்தது. 6-வது ஊதியக்குழுவில் அது முற்றிலும் மறுக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களான எங்களைத் தவிர, மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. அரசு ஊழியர்களில் பெரும்பான்மையினருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தற்போது வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில், 10-ம் வகுப்பு கல்வித் தகுதி மட்டுமே கொண்ட ஏனைய அரசு ஊழியர்களுக்குக்கூட ரூபாய் 9300-4200, 4400 என வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மாநில அரசு நியமிக்கும் ஒருநபர் அல்லது இருநபர் குழுக்களிடம் எங்களது ஊதியமுரண்பாட்டை விளக்கி ஊதியம் கோரும்போது, அவர்கள் ‘இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கையில் அதிகம். அவர்களுக்கு இந்தி தெரியாது; கணினி கற்றுக்கொள்ளவில்லை எனப் பல காரணங்களைக் கூறி, எங்களது நியாயமான கோரிக்கைகளை நிராகரித்துவிடுகிறார்கள்.
1.6.2009-க்கு முன் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் 8370-2800 எனவும், 1.6.2009- க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு, எங்களுக்கு 5200-2800 என அடிப்படை ஊதியத்தில் 3170ஐ குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டைத்தான் களைய வேண்டும் என்று போராடிவருகிறோம். இதற்காக, கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் 20 முதல் 28 வரை 8 நாள்கள் மாநில பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். 8-ம் நாள், அரசு தரப்பில் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தியவர்கள், 2009-க்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்யும்படி, 7-வது ஊதியக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்படும்’ என எழுத்துபூர்வமாக உத்ரவாதம் அளித்தார்கள். ஆனால்,அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த அரசு எங்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது”; என்றார்.
No views yet
நிர்மலா தேவி விவகாரம்! விசாரணையைத் தொடங்கியது சி.பி.சி.ஐ.டி
மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைக்கும்நோக்கில் பேசிய பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் இன்று விசாரணையைத் தொடங்கினர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள தேவாங்கர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை, அந்தக் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலா தேவி, பாலியல் தொழிலுக்கு அழைக்கும் உரையாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டார். நிர்மலா தேவி தொடர்பான வழக்கு, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், வழக்குத் தொடர்பான கோப்புகளைப் பெற்று, சி.பி.சி.ஐ.டி பிரிவினர் விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினரிடம் தகவல்களைப் பெற்ற சி.பி.சி.ஐ.டி போலீஸார், இன்று சம்பந்தப்பட்ட கல்லூரியில் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.
No views yet
ஆர்.எஸ்.பாரதியை தி.மு.க கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்! தமிழிசை
தி.மு.க எம்.பி. கனிமொழி குறித்து சர்ச்சைக் கருத்து பதிவிட்ட ஹெச்.ராஜாவுக்கு மறைமுகமாக தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா, நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதி குறித்தும், கனிமொழி குறித்தும் தரக்குறைவான கருத்தைப் பதிவிட்டிருந்தார். இது, தி.மு.க-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஹெச்.ராஜாவைக் கண்டித்து பல்வேறு இடங்களில் பல போராட்டங்களும், உருவ பொம்மை எரிப்பு சம்பவங்களும் நடைபெற்றன. மேலும், பல தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹெச்.ராஜாவின் கருத்துக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள், எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத்தருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின்தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத்தருகிறது…..
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 18, 2018
மேலும், ஹெச்.ராஜாவின் ட்விட்டர் கருத்தைக் கண்டித்து, தி.மு.க எம்.பி., ஆர்.எஸ் பாரதி, ஹெச்.ராசாவை மிகவும் கடுமையான முறையில் விமர்சித்திருந்தார். இவரின் கருத்துக்கும் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழக அரசியல், நாகரிகமாக எடுத்துச்செல்லப்பட வேண்டும் என நினைக்கிறேன். எதிர்ப்பு தெரிவிப்பதும் கண்ணியமாக இருக்க வேண்டும். ஆர்.எஸ்.பாரதியின் கடிதம், “தாய்மையைக் கொச்சைப்படுத்துவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தி.மு.க இதைக் கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசியல், நாகரிகமாக எடுத்துச்செல்லப்பட வேண்டும் என நினைக்கிறேன்.எதிர்ப்பு தெரிவிப்பதும் கண்ணியமாக இருக்கவேண்டும்.தி.மு.க ஆர்.எஸ். பாரதியின் கடிதம், “தாய்மையைக் கொச்சைப்படுத்துவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தி.மு.க இதைக் கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 19, 2018
No views yet
“இப்படியே போனால்…. குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' – எஸ்.வி.சேகர்
பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்புகள் கூடிக்கொண்டே போகின்றன. இந்த ஆடியோவில் ஆளுநர் பெயரும் அடிபட்டதையடுத்து, அரசியல் கட்சிகள் `ஆளுநர் பதவி விலக வேண்டும்’ என கோரிக்கை எழுப்பினர். சமூக வலைதளங்களிலோ ஆளுநரை மோசமாக சித்திரித்து கருத்துகள் பரிமாறப்பட்டு வந்தன. இந்நிலையில், இவ்விவகாரத்துக்குப் பதில் கொடுக்கும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் கேள்வி – பதில் நிகழ்ச்சிக்கு ஆளுநரே ஏற்பாடு செய்திருந்தார். அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆளுநரே நேரடியாக பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தியிருப்பதும் இப்போது ஆச்சர்ய அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
மேலும் இந்நிகழ்வில், பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஆளுநரும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தன் செய்கைக்கு மன்னிப்பு கோரியுள்ளார். தொடர்ச்சியான இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, ‘ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும்’ என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழ ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், ஆளுநர் நடத்தியுள்ள பத்திரிகையாளர் சந்திப்பு நடைமுறைகள் குறித்து தமிழக அரசியல் கட்சியினரிடையே கருத்து கேட்டோம்…
மா.சுப்பிரமணியன் – தி.மு.க (முன்னாள் மேயர்)
“பத்திரிகையாளர் சந்திப்பு என்பது இதுவரையிலும் எந்தக் கவர்னரும் செய்யாத வேலை. ‘என்மீதே குற்றச்சாட்டு கூறப்படுவதால், சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கட்டும். நான் எல்லாவற்றுக்கும் ஒத்துழைக்கத் தயார்’ என்று நேர்மையாக பத்திரிகை அறிவிப்பை மட்டும் கொடுத்துவிட்டுப் போயிருக்கலாம். இப்படி அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்திருக்க வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை.
இந்தப் புகார் குறித்து விசாரிக்க துணைவேந்தரே, ஐவர் குழு அமைத்திருக்கும் சூழலில், ஆளுநரும் அவசரமாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை விசாரணைக்காக நியமித்திருப்பது அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.”
அமைச்சர் கே.பி.அன்பழகன் – அ.தி.மு.க.(உயர் கல்வித்துறை அமைச்சர்)
“இந்த விஷயம் சம்பந்தமாக ஆளுநரே பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டு பேட்டி கொடுத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதே என் கருத்து”
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் – காங்கிரஸ் (தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்)
“அவசரம் அவசரமாக ஆளுநரே இவ்விஷயத்தில் தலையிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்திருப்பது, விசாரணைக் கமிஷன் அமைத்திருப்பது ஆகியவை சந்தேகத்துக்கு உரியது. சம்பவம் பற்றிய தகவல் வெளிவந்த மூன்றாவது நாளிலேயே ஆளுநர் இவ்வளவு விரைவாகச் செயல்படுவதுதான் இந்த சந்தேகத்துக்குக் காரணம். எனவே, இந்த விஷயத்தில் உள்ள மர்மங்களைப் பார்த்தால், ஏதோ ஒருவகையில் ஆளுநருக்கும் இவ்விஷயத்தில் சம்பந்தம் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.”
எஸ்.வி.சேகர் (பி.ஜே.பி ஆதரவாளர்)
“ ‘கவர்னர் என்பவர் வயசானவர்; வெறுமனே ஒரு ரூம்ல உட்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கலாம். அதைத்தவிர வேறெதுக்கும் அவர் வரக்கூடாது’ என்பதுமாதிரியான ஒரு மனோபாவம் திராவிட அரசியலில் ஊறிப்போயிருக்கிறது. அதனால்தான் இப்படியெல்லாம் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய பணத்தை திருடிக் கொண்டிருப்பவர்களுக்கு பயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் ஆளுநர் ஆய்வைக்கூட குற்றம் சொல்கிறார்கள்.
`பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை எட்டிப் பார்த்தார்’ என்று ஏற்கெனவே, ஒரு புரளி கிளப்பினார்கள். அப்புறம் அந்தப் பொண்ணே, ‘அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. இது என்னை அசிங்கப்படுத்தும் முயற்சி’ என்று பேட்டி கொடுத்தார்.
ஜெயலலிதா அஞ்சலியின்போது சசிகலாவின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார் மோடி. இதே அவர் சசிகலாவைப் பார்த்துக் கும்பிட்டிருந்தால், ‘கைகுலுக்காமல், கும்பிடுகிறீர்களே?’ எனத் திரி கிள்ளியிருப்பார்கள். இப்போதும் பத்திரிகையாளர் சந்திப்பில் நடைபெற்ற ஒரு சாதாரண நிகழ்வைக் குற்றம் சொல்கிறார்கள். இப்படியே போனால், ஒரு கல்யாண வீட்டில் குழந்தையை எடுத்துக்கூட கொஞ்சமுடியாது. இதையெல்லாம் பார்க்கும்போது, மறுபடியும் தமிழகம் காட்டுமிராண்டிக் காலத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது’ என்றே நினைக்கத் தோன்றுகிறது.”
முத்தரசன் – இந்தியக் கம்யூ (மாநிலச் செயலாளர்)
”பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பதென்பது, ஆளுநரின் வேலையல்ல. அதுவும் கவர்னர் மாளிகையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இதுபோல் எந்த ஆளுநரும் நடந்துகொண்டதாக முன்னுதாரணமும் இல்லை. இந்த விஷயத்தில் இவர் இவ்வளவுதூரம் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை… அப்படி பதற்றப்படுகிறார் என்றால், அதன் காரணம் என்னவென்றும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆய்வு மேற்கொள்வது, பத்திரிகையாளர்களைச் சந்திப்பது, துணைவேந்தர் நியமன விஷயத்தில் தன் விருப்பப்படி நடந்துகொள்வது போன்றவையெல்லாம் ‘தனக்குத்தான் அதிகாரம் உள்ளது’ என்பதை அவர் உணர்த்துவதாகவே உள்ளது.” என்றார்.
No views yet
‘‘பாலியல் வழக்குக்கு முடிவுகட்டவே சிபிசிஐடி இயக்குநர் திடீர் மாற்றம்’’ – ராமதாஸ் குற்றச்சாட்டு
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட 24 மணிநேரத்திலேயே அதன் இயக்குநர் மற்றப்பட்டிருப்பது இந்த வழக்குக்கு முடிவு கட்டவே என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
No views yet
எச்.ராஜா ட்வீட்: தமிழிசை வேதனை
பெண் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது வருத்தம் அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
No views yet
மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல்: பசுத்தோல் போர்த்திய புலிகள் யார்? – விஜயகாந்த் கேள்வி
மாணவிகளுக்கு பேராசிரியை பாலியல் வற்புறுத்தல் அளித்த விவகாரத்தில், நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
No views yet
ஆளுநரின் செயல்பாடுகளால் சந்தேகங்களும் சர்ச்சைகளும் தொடர்வதா? – ஜி.கே.வாசன்
தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ளதை மத்திய அரசு முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
No views yet
விடைத்தாள்கள் திருத்தும் நேரத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
விடைத்தாள்கள் திருத்தும் நேரத்தில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
No views yet
எச்.ராஜாவுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்
பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா திமுக தலைவர் கருணாநிதி, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
No views yet
சுவிதா சிறப்பு ரயில்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் பாதிப்பு
கோடை விடுமுறையையொட்டிஇயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயில்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
No views yet
பிறக்கும்போதே காது கேளாமையை கண்டறிய தமிழகம் முழுவதும் 162 இடங்களில் விரைவில் பரிசோதனை மையங்கள்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட காது கேளாமை நரம்பியல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காது வால் நரம்பு உள்வைப்பு கருவி (காக்ளியர் இம்பிளான்ட்) பொருத்தப்படுகிறது
No views yet
சிலை வழக்கில் கைதான ஸ்தபதிக்கு உடல்நலக் குறைவு
பழநி கோயிலுக்கு சிலை செய்ததில் முறைகேடு நடந்ததான புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்தபதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
No views yet
தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை: போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேர் கைது
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரியும், தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் 63 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
No views yet
அசாதாரண சம்பவங்கள் நடக்கின்றன: சிறைக்குள் நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்து- நேரில் சந்தித்த வழக்கறிஞர் பேட்டி
மதுரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரை நேரில் சந்தித்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
No views yet
அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரம்: உயர் நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும்- பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இரா.முத்தரசன் வலியுறுத்தல்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற அருப்புக்கோட்டை பேராசிரியை தொடர்பான விவகாரத்தை பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
No views yet
Goa Police arrests man for spreading fake news about Manohar Parrikar’s health
This comes just two days after a Bharatiya Janata Party leader said that the condition of Goa Chief Minister Manohar Parrikar was improving.
No views yet
Gagan Shakti 2018: IAF shows no border area too desolate for its fighter jets
Deploying Advanced Landing Grounds (ALGs) in far-flung border areas, the Indian Air Force let pilots and support staff hone their skills in conducting operations in challenging conditions.
No views yet
PM Modi in London: Protest held over detention of Scots Sikh Jagtar Singh Johal in India
The Punjab government has said that Johal is among a group of suspects arrested on allegations of fanning communal disturbance in the state. Supporters claim the charges are false.
No views yet
Rising US-China trade tension may restrain India’s growth in 2018: Study
India will claim the top spot among the world’s fastest-growing major economies this year, says a poll conducted by Reuters.
No views yet
UPSEB to declare UP board class 10 results, UP board class 12 results on upresults.nic.in and upmspresults.up.nic.in at 12.30 pm on April 29
The Uttar Pradesh Secondary Education Board (UPSEB) is slated to declare the results of UP Board High School or Class 10 and Intermediate or Class 12 on Sunday, April 29 on its official websites upresults.nic.in and upmspresults.up.nic.in. The results of UPSEB Board examinations will be declared on the websites upresults.nic.in and upmspresults.up.nic.in at 12.30 pm.
No views yet
IIT-Kanpur student commits suicide in hostel room
A student of the Indian Institute of Technology, Kanpur, allegedly committed suicide on Wednesday by hanging himself from the ceiling in his hostel room.
No views yet
PSEB class 10 results and PSEB class 12 results likely to be declared on pseb.ac.in by Punjab School Education Board on April 28
The Punjab School Education Board (PSEB) is likely to announce the results of class 10 and class 12 board examinations on official website pseb.ac.in on April 28, if reports are to be believed. The results will also be made available on results site indiaresults.com.
No views yet
In London, PM Narendra Modi reveals the `secret of his fitness`
In a free-willing chat in front of a large Indian diaspora in London, Prime Minister Narendra Modi answered questions on a number of topics – including the secret behind his good health.
No views yet
நிர்மலா தேவிக்கு எதிராக திருச்சியில் பெண் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை விவகாரம் தொடர்பாக, திருச்சியில் பெண் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 12 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவிக்கு எதிராக, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.
மகளிர் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் நிர்மலாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துவருகின்றன. இந்த விவகாரத்தில், நடந்த உண்மையை உலக்குக்குத் தெரியப்படுத்த, உண்மையான குற்றவாளிகளை கண்டறிய, சி.பி.ஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் பெண் வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திருச்சி வழக்கறிஞர் பானுமதி தலைமையில் திரண்டு நீதிமன்றத்துக்கு வெளியே வந்த வழக்கறிஞர்கள், தனியார் கல்லூரி மாணவிகளைப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்த முயன்ற பேராசிரியை மீதான குற்றத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கக் கோரியும், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி கிரிமினல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரகுமார், வழக்கறிஞர் கமருதீன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தால் திருச்சி நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
No views yet
தேனியில் தொடங்கியது சித்திரைத் திருவிழா – வீரபாண்டி கோயிலில் திருவிழாக் கம்பம் நடப்பட்டது!
தேனி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் தொடக்கமாக, நேற்று (18/04/2018) கம்பம் நடுதல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா, எட்டு நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டு, வரும் மே 8 -ம் தேதி முதல் 15 -ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக நேற்று கோயிலில் கம்பம் நடும் விழா நடத்தப்பட்டது. இந்தக் கம்பம், உத்தமபாளையம் முல்லைப்பெரியாறு ஆற்றின் கரையில் இருந்த அத்தி மரத்தில் செய்யப்பட்டது. இன்று முதல் 22 நாள்களுக்கு கம்பத்திற்கு சிறப்பு பூஜை நடைபெறும். தினந்தோறும் மாலை, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன், மண்டகப்படிகளுக்கு வந்து, பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார். இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் மேற்கொள்வார்கள்.
இன்று காப்பு கட்டும் பக்தர்கள், திருவிழாவின்போது தீச்சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அங்கபிரதட்சணம், மாவிளக்கு ஏற்றுதல், கண்மலர் செலுத்துதல், அலகு குத்துதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்துவர். நடைபெற இருக்கும் எட்டு நாள் திருவிழாவுக்காக நேற்று முதலே தயாராகத் தொடங்கிவிட்டனர் தேனி மாவட்ட மக்கள். திருவிழாவுக்கு தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.
No views yet
ஆடு மேய்க்க பிள்ளைகளை விற்ற தந்தை; சிவகங்கையில் ரூ.50,000-க்கு நடந்த துயரம்!
பணத்துக்காக பெற்ற பிள்ளைகள் இரண்டு பேரை ஆடு மேய்க்க விற்பனைசெய்த தந்தையை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதா உத்தரவின் பேரில் போலீஸார் தேடிவருகின்றனர். இச்செய்தி, சிவகங்கை மக்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்தவர்கள், அங்குச்சாமி மற்றும் ஆனந்தகுமார். தந்தையும் மகனுமான இவர்கள், இளையான்குடி அருகே உள்ள விளங்குளம் கிராமத்தில் செம்மறி ஆடு கிடை வைத்து மேய்த்துவருகிறார்கள். இந்நிலையில், ஆடு மேய்ப்பதற்கு ஆள் தேடி அலைந்திருக்கிறார்கள். வருஷத்துக்கு, ஒரு லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் கொடுக்க, ஆடு கிடை வைத்திருப்பவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இந்தக் காலத்தில் ஆடு மேய்ப்பதற்கு ஆள்கள் கிடைப்பதில்லை.
இந்நிலையில்தான் அங்குச்சாமி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அம்மனிசத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரைத் தொடர்புகொண்டிருக்கிறார். அப்போது, ‘தன்னிடம் இரண்டு பசங்க இருப்பதாகவும், ஆனால், முன் பணமாக ஐம்பதாயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டிருக்கிறார் ராஜேந்திரன். அங்குச்சாமியும் ஆனந்தகுமாரும் அவர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு, இரண்டு பசங்களையும் வாங்கியிருக்கிறார் . இவர்கள் யார் என்று கேட்டபோது, என்னுடைய மகன்கள்; எனக்குப் பணம் தேவைப்படுகிறது, அவர்களை என்னால் வளர்க்க முடியவில்லை என்று சொல்லியிருக்கிறார். வாழ்க்கை முழுவதும் இரண்டு அடிமைகள் கிடைத்துவிட்டார்கள் என்கிற சந்தோஷத்தில், தந்தையும் மகனும் ஆடு கிடை இருக்கும் விளங்குளம் கிராமத்துக்கு வந்திருக்கிறார்கள்.
கடந்த ஒரு மாத காலமாக இந்தச் சிறுவர்களுக்கு வயிற்றுக்குச் சாப்பாடுகூட கொடுக்காமல், ஆட்டுக் கிடையில் படுக்க வைத்திருக்கிறார்கள். இந்தத் தகவல், சிவகங்கை மாவட்ட குழந்தை நல பாதுகாப்புப் பணியாளர் சத்தியமூர்த்திக்குத் தெரிய வரவே, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி மற்றும் சைல்டுலைன் அமைப்பினர், இளையான்குடி போலீஸாரோடு சென்று, அந்தச் சிறுவர்களை மீட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து சத்தியமூர்த்தியிடம் பேசியபோது,“ஏழு வயதான தங்கப்பாண்டி, ஐந்து வயதான ஈஸ்வரன் ஆகிய இரண்டு குழந்தைகளையும் இவர்களின் தகப்பனார் ராஜேந்திரன் ஆடுமேய்ப்பதற்காக பணத்தை வாங்கிக்கொண்டு விற்பனை செய்திருக்கிறார். இந்தத் தகவல் தெரியவந்ததும், இளையான்குடி போலீஸாரோடு சென்று, கொத்தடிமைகளாக இருந்த சிறுவர்களை மீட்டு, மாவட்ட ஆட்சியர் லதாவிடம் ஒப்படைத்திருக்கிறோம்”; என்றார். பணத்துக்காக பெற்ற பிள்ளைகள் ரெண்டு பேரை ஆடு மேய்க்க விற்பனைசெய்த தந்தையை ஆட்சியர் லதா உத்தரவின் பேரில் போலீஸார் தேடிவருகின்றனர்.
No views yet
“குமரியில் துறைமுகம் அமைக்கக் கூடாது என இந்தியாவை இலங்கை மிரட்டுகிறது" – பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு!
கன்னியாகுமரியில் நாம் துறைமுகம் அமைக்கக்கூடாது என இந்தியாவை இலங்கை மிரட்டுவதாக நாகர்கோவிலில் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் நடந்த கன்னியாகுமரி வளர்ச்சி இயக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் கோவளம் பகுதியில் அமைய உள்ள வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாகப் பேசினார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உலகத்தில் உள்ள மிக முக்கியமான கடல்வழியில் பசிபிக் மற்றும் அண்டார்ட்டிக்கா கடல் வழிகள். இவற்றைவிட இந்தியப் பெருங்கடல் மிக முக்கியமானது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் போகும் கப்பல்கள் இந்த வழியில் செல்கின்றன. இந்தக் கடல் வழியில் எந்த முக்கிய துறைமுகமும் இல்லை.
சென்னை, விசாகப்பட்டினம், மும்பை, கொச்சி ஆகிய மற்ற துறைமுகங்கள் இந்தக் கடல்வழியை விட்டு விலகி இருக்கின்றன. சர்வதேச சரக்கு கப்பல்கள் அந்தத் துறைமுகங்களுக்குச் செல்வதில்லை. நம் நாட்டிலிருந்து மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு சரக்கு அனுப்ப கொழும்பு அல்லது சிங்கப்பூர் துறைமுகங்களுக்குச் சின்ன கப்பலில் அனுப்பி அங்கிருந்து பெரிய கப்பல்களில் மாற்றி அனுப்ப வேண்டி இருக்கிறது. இதனால் நம் நாட்டுக்கு ஒரு ஆண்டில் 1,500 கோடி ரூபாய் செலவாகிறது. தமிழகம் தொழில் வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் உள்ளது, இன்னும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் வசதிக்காகத் தமிழகத்தில் துறைமுகம் இல்லை. 16 மீட்டர் மிதவை ஆழம் இருந்தால்தான் பெரிய சரக்கு கப்பல்கள் வரமுடியும். அதற்கேற்ற ஆழம் குமரி கடல் பகுதிகளில் உள்ளது.
கோவளம் முதல் மணக்குடி வரையிலான பகுதியில் 20 மீட்டர் மிதவை ஆழம் இருக்கிறது. இதன்மூலம் நம் சரக்குகளை உடனடியாக சர்வதேச நாடுகளுக்கு அனுப்ப முடியும். சர்வதேச கடல் வழிக்கு அருகில் இந்தத் துறைமுகம் அமைய இருக்கிறது. இந்தத் துறைமுகத்தை அமைக்க விடாமல் இலங்கை அரசு தடுக்கிறது. நேரு பிரதமராக இருந்தபோதே அப்போதைய இலங்கை பிரதமர் இங்கு துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார். துறைமுகம் அமைத்தால் கொழும்பு துறைமுகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என அவர் சொன்னதால், அந்தத் திட்டத்தை ஒத்தி வைத்தார்கள். இப்போதும் நாம் துறைமுகம் அமைக்கக் கூடாது என இலங்கை இந்தப் பிரச்னைக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவை மிரட்டுவதற்காக கொழும்பு துறைமுகத்தில் அமைக்கும் ஐந்தாவது கட்டத்தை சீனாவுக்குக் கொடுப்போம் எனக் கூறுகிறார்கள். அப்படி சீனா துறைமுகம் அமைத்தால் இந்தியாவுக்கு ஆபத்து. கொழும்பு துறைமுக ஐந்தாவது கட்டத்தை அமைக்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கவேண்டுமானால் கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்கக் கூடாது என அழுத்தம் கொடுக்கிறார்கள்.
கேரள மாநிலமும் அவர்களது துறைமுகத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைவதை விரும்பவில்லை. துறைமுகம் அமைப்பது பா.ஜ.க. அரசா வேறு அரசா என பார்க்காமல் தமிழக வளர்ச்சிக்குத் தேவை என அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். துறைமுகத்துக்கு எதிராக போராடுபவர்கள் குறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு”; என்றார்.
No views yet
அ.தி.மு.க எம்.பி யின் கார் மோதியதில் தி.மு.க இளைஞர் அணி உறுப்பினர் பலி!
திருப்பூர் எம்.பி சத்யபாமாவை கோவை விமானநிலையத்தில் இருந்து அழைத்து வரச் சென்ற ஸ்கார்பியோ கார் மோதியதில் தி.மு.க வைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க எம்.பி சத்யபாமா. இவரது வீடு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைந்திருக்கிறது. எம்.பியான இவர் டெல்லி மற்றும் பல்வேறு வெளிமாநிலங்களுக்குச் செல்ல கோவை விமானநிலையத்தையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், வெளியூர் சென்றுவிட்டு நேற்று கோவை விமான நிலையம் வந்து இறங்கிய சத்யபாமாவை, அவரது சொந்த ஊரான கோபிச்செட்டிபாளையம் பகுதிக்கு அழைத்துச் செல்வதற்காக செந்தில்குமார் என்பவர் ஸ்கார்பியோ காரில் கோபியில் இருந்து கோவை நோக்கிச் சென்றிருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்துள்ள செட்டிக்குட்டை பிரிவு என்ற பகுதியை கார் கடந்துகொண்டு இருக்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியே சென்ற இரு சக்கர வாகனத்தின்மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அருண்குமார் என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த நபர் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க இளைஞர் அணி உறுப்பினர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அருண்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக அருண்குமாரின் சகோதரர் பெருமாள் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
No views yet
முன் ஜாமின் கோரி சத்யபிரியா உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல்!
சசிகலா புஷ்பா எம்.பி மறுமணம் செய்துகொண்ட டெல்லியைச் சேர்ந்த ராமசாமி தனது முதல் மனைவியின் மகளை, தன் முன்னாள் மனைவி சத்யபிரியா சித்ரவதை செய்ததாக டெல்லி வடக்கு அவென்யூ காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் சத்யபிரியா அவரது தம்பி மணிகண்டன் ஆகியோர் மீது போஸ்கோ சட்டத்தின்படி டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக ஏப்ரல் 24-ம் தேதி 3 மணிக்கு டெல்லி வடக்கு அவென்யூ காவல் நிலையத்தில் 2 பேரும் நேரில் ஆஜராக வேண்டிய நோட்டீஸை சத்ய பிரியாவின் மதுரை கீரைத்துறையில் உள்ள வீட்டில் டெல்லி போலீஸார் ஒட்டினர். இந்த நிலையில், சத்யபிரியா உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் ராமசாமி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்து விட்டார். தற்போது சசிகலா புஷ்பா எம்.பி.யை திருமணம் செய்துள்ளார். இது சட்டத்துக்கு உட்பட்டதா என தெரியவில்லை. தவறான தகவலால் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார், இந்த மனு விரைவில் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.
No views yet
சாலை வசதி கோரி மாடுகளுடன் மனு அளிக்கச் சென்ற பொதுமக்கள்!
நெல்லை மாவட்டம் தென்காசி நகராட்சியில் சாலை வசதி செய்து தரக்கோரி நகராட்சி ஆணையாளரிடம் மாடுகளுடன் சென்று பொதுமக்கள் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைக் கவனிக்க ஆள் இல்லாத நிலைமை உருவாகி இருக்கிறது. ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை சீர்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சாகசத்துக்குப் பின்னரே உரிய இடத்தைச் சென்றடைய முடிகிறது. பல இடங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் குழிகள் மிகுந்த சாலைகளில் விழுந்து எழும் நிலைமை உள்ளது. அதனால் இந்தச் சாலைகளை சரிப்படுத்த வேண்டும் எனப் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தச் சாலைகளைச் சீரமைக்க நகராட்சி ஆணையாளரிடம் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் பல முறை மனு அளித்தனர், முன்னாள் உறுப்பினர்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், நகராட்சி நிர்வாகத்தைக் கண்டிக்கும் விதமாகப் பசுமாடு மற்றும் அதன் கன்றுக்குட்டியுடன் நகராட்சி அலுவலகம் முன்பாகத் திரண்டனர்.
பின்னர் மாடுகளுடன் சென்று, சிதிலமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மனுவில், ’மனிதர்கள் கொடுக்கும் மனு மீது நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகமே கால்நடைகளாகிய நாங்கள் கொடுக்கும் மனு மீதாவது நடவடிக்கை எடு’ என எழுதி அதனைப் பசுவின் கழுத்தில் கட்டினார்கள். அந்த மனுவில் பசுவின் கால் தடங்களையே கையெழுத்தாகப் பெற்று நகராட்சி ஆணையாளரிடம் கொடுத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
No views yet
தாயும் மகனும் விஷமருந்தி தற்கொலை..! உடுமலை அருகே நடந்த சோகம்
மனநலம் பாதித்த மகனை பராமரிக்க முடியாமல், மகனுடன் சேர்ந்து தாயும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உடுமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
உடுமலை சீனிவாசா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு செவிலியர் லூயிஸ் மேரி. இவரது கணவர் ராஜன் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட, இவர்களது குழந்தைகளான மனோஜ்குமார் மற்றும் மீனா ரோஸி ஆகிய இருவரும் தாயின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தனர். மகன் மனோஜ்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தனர். மகள் மீனா ரோஸி அப்பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் மீனா ரோஸி வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட, அச்சமயம் வீட்டில் இருந்த தாய் லூயிஸ் மேரி, அவர்களது வீட்டின் முன்பக்க கதவைப் பூட்டிவிட்டு பின்பக்கமாக உள்ளே சென்று, தன்னுடைய மகன் மனோஜ்குமாருடன் சேர்ந்து விஷம் அருந்தி உள்ளார்.
பின்னர் இரவு வழக்கம்போல வீடு திரும்பிய மீனாரோஸி, வீட்டின் கதவு பூட்டியிருப்பதைப் பார்த்து சந்தேகம் அடைந்திருக்கிறார். பின்னர் உடனடியாக வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது, அங்குக் கதவு திறந்தவாறு இருந்திருக்கிறது. மேலும் வீட்டுக்குள் அவரது தாயும், சகோதரனும் சடலமாக கிடந்திருக்கிறார்கள். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடுமலை காவல்நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். அதன்பிறகு சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், “மனநலம் பாதிக்கப்பட்ட மகனை லூயிஸ் மேரியால் தொடர்ந்து பராமரிக்க முடியாமல்போனதால், விரக்தியடைந்து இப்படியொரு முடிவை எடுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
No views yet
சேலம் மாவட்டம் முழுவதும் ஹெச்.ராஜா உருவபொம்மை எரித்து தி.மு.க-வினர் போராட்டம்!
தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சனம் செய்ததை அடுத்து சேலம் தி.மு.க.,வினர், மாவட்டம் முழுவதும் ஹெச்.ராஜா உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் .
சேலம் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள அண்ணா சிலை முன்பு மாநகர செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் ஹெச்.ராஜா உருவ பொம்மை எரிக்கப்பட்டது. சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் தி.மு.க., பகுதி கழக செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஹெச்.ராஜா உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை பகுதிகளில் கேபிள் ராஜா தலைமையில் ஹெச்.ராஜா உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தாதகாப்பட்டி பகுதியில் செயலாளர் சரவணன் தலைமையில் ஹெச்.ராஜா உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே உள்ள பெரியார் சிலை முன்பு மாநகர தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் கேபிள் சரவணன் தலைமையில் ஹெச்.ராஜா உருவ பொம்மை எரிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இது தவிர மகுடஞ்சாவடி, ஆத்தூர், சங்ககிரி போன்ற சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஹெச். ராஜா உருவ பொம்மைகள் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
இதுபற்றி சேலம் மாநகர செயலாளர் ஜெயக்குமார், “ஹெச்.ராஜா தொடர்ந்து தமிழ் மக்களையும், பெண்களையும் இழிவுப்படுத்திப் பேசி வருகிறார். இதற்கு முன்பு தலைவர் கலைஞரையும், ஸ்டாலினையும் விமர்சித்துப் பேசினார். ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பாமர மக்களைப் போல பேசி வருவது வெட்கக் கேடானது. இதனால் தி.மு.க., தொண்டர்கள் மனம் புண்பட்டு உள்ளது. தி.மு.க., அறவழியில் போராடும்” என்றார்.
No views yet
`கல்வாழை கழிப்பறை’ அரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு!
ஜப்பான் நாட்டிற்குத் தனது அறிவியல் கண்டுபிடிப்பின் காரணமாகச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் கரூர் மாவட்ட பள்ளி மாணவனை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் அழைத்துப் பாராட்டுதலும், ஆலோசனையும் வழங்கினார்.
நடப்பு கல்வியாண்டில் தமிழகம் சார்பாக ஜப்பான் செல்லும் இளம் விஞ்ஞானியான தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவன் ம.ஹரிஹரனை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் அழைத்துப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், “அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு அறிவியல் ஆர்வமுள்ள மாணாக்கர்களைத் தேர்வு செய்து ஜப்பான் நாட்டின் அறிவியல் முன்னேற்றங்களைக் காண செய்வதுடன், அந்நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் செய்யவும், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நடப்பு கல்வியாண்டில் 6 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகம் சார்பாக மே 12 முதல் 19 வரை ஜப்பான் நாட்டிற்குச் சென்று அறிவியல் முன்னேற்றங்களைக் காண உள்ளனர். இதுபோன்று மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய உள்ளார்ந்த திறமைகளை மேம்படுத்துவதற்குக் கண்டுபிடிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், இது ஒரு உந்து சக்தியாக உள்ளது. இதற்குத் துணைபுரியும் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் வெகுவாக பாராட்டுகிறேன். ஹரிஹரன் நமது மாவட்டத்திற்கு மட்டுமல்ல, அரசுப்பள்ளிகளுக்கே பெருமையை தேடித் தந்துள்ளார். ஒரு சாதாரண குக்கிராமத்தைச் சேர்ந்த இவர் தனது அறிவியல் ஆய்வு திறமையால், ஜப்பான் நாட்டிற்குச் செல்லும் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார். இதுபோன்று மற்ற மாணவர்களும் இதுபோல் அறிவியலில் சாதனை புரிய வாழ்த்துகள்”; என்றார்.
ஜப்பான் செல்லும் வாய்ப்பைப் பெற்ற மாணவன் ஹரிஹரனிடம் பேசினோம். “நான் சாதாரண கிராமத்தைச் சேர்ந்தவன். என்னை இந்த அளவுக்கு ஜப்பான் வரை போக காரணமாக இருந்தவர் எங்கள் பள்ளியின் அறிவியல் வழிகாட்டு ஆசிரியர் தனபால் சார்தான். நான் கண்டறிந்த சூழலியல் காக்கும் கழிவறைதான் என்னை ஜப்பான் வரை போக வச்சுருக்கு. கல்வாழை மூலம் சூழலிக்கு எந்த கெடுதலும் வராத, அதேநேரம் நீரும் அதிகம் செலவாகாத இந்த கழிப்பறையால், சுகாதாரம் பெருகும். இந்த கழிவறை அமைக்க பணமும் அதிகம் செலவாகாது”; என்றார்.
No views yet
"கழிப்பறை பழக்கமே அறிவு வளர்ச்சியின் அடையாளம்" – விழிப்புஉணர்வு நிகழ்ச்சியில் ஆட்சியர் அறிவுரை!
“;கழிவறை பழக்கம் அறிவு வளர்ச்சியின் அடையாளம். இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்”; என விஸ்வநாதபுரியில் நடைபெற்ற கிராம சுயாட்சி இயக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பேசினார்.
அரசு செயல்படுத்தும் திட்டங்கள், வங்கி நிதியுதவிகள், சுகாதாரம் தொடர்பான தகவல்களை கிராம மக்களிடம் கொண்டு சென்று விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியான கிராம சுயாட்சி இயக்க விழாவின் 2-ம் நாள் நிகழ்வான தூய்மை பாரதம் நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், விஸ்வநாதபுரி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் அவர்கள் தலைமையில் நேற்று (18.04.2018) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், “;அரசுத் திட்டங்கள் வங்கி நிதியுதவிகள், சுகாதாரம் தொடர்பான விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டு, கரூர் மாவட்டத்தில் முன்னோடியாக 8 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சுயாட்சி இயக்க விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று (18.04.2018 ) நடைபெறும் இந்த விழா முழுக்க முழுக்க சுகாதாரம் தொடர்பான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. அதிகாலை முதல் வீதி வீதியாகத் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுத்திட விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் மேள தாளத்துடன் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இங்குள்ள குழந்தைகள் பொதுமக்கள் சுத்தமான துவைத்த ஆடைகளை அணிந்திடவும், சோப்பு தேய்த்து குளித்திடவும், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மலம் கழிக்க கழிப்பறையை மட்டும் பயன்படுத்த வேண்டும். மலம் கழித்த பிறகு கைகளை சோப்பினால் கழுவி சுத்தம் செய்திட வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பல்வேறு தொற்று நோய்கள் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. இந்த நிலையைப் போக்கிட சுகாதாரமான தமிழகத்தை உருவாக்கிட அனைத்து இல்லங்களிலும் தனிநபர் கழிப்பறையைக் கட்டிட வேண்டும். இதற்காக அரசு ரூ.12,000 வழங்குகிறது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி கழிப்பறையைக் கட்டி அதை பயன்படுத்திட வேண்டும். கழிப்பறை பழக்கமே அறிவு வளர்ச்சியின் அடையாளம்”; என்றார்.
No views yet
-
CT 100 பைக்கின் விலை, 5000 ரூபாய் குறைந்தது - பஜாஜ் ஆட்டோ அதிரடி!
‘இந்தியாவின் விலை குறைவான பைக்’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான CT 100 சீரிஸ் பைக்கின் விலையை, இன்னும் குறைத்திருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். ஹீரோ – ஹோண்டா – டிவிஎஸ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், பைக்குகளை மட்டுமே இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. எனவே அதிகரித்து வரும் போட்டியை கருத்தில் கொண்டும், தனது விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்திலும், தனது ஆரம்ப கட்ட மாடலான CT 100 சீரிஸ் பைக்குகளின் விலைகளை மாற்றியமைத்திருக்கிறது பஜாஜ். இந்தப் புதிய […]
-
காத்தாடி – திரை விமர்சனம்
நாயகன் அவிஷேக் கார்த்திக்கும், டேனியலும் நண்பர்கள். சிறிய அளவில் திருட்டுத் தொழில் செய்து தங்களது பிழைப்பை பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பெரிய அளவில் ஒரு பணம் சம்பாதிக்க முடிவு செய்து, சம்பத்துடன் காரில் வரும் பேபி சாதன்யாலை பார்க்கின்றனர். இதையடுத்து சாதன்யாவை கடத்தி, சம்பத்திடம் பணம் கேட்க முடிவு செய்து, சாதன்யாவையும் கடத்தி செல்கின்றனர். பின்னர் சம்பத்திடம் பணம் கேட்க, சம்பத்தும் பணம் தர சம்மதிக்கிறார். இந்நிலையில், போலீஸ் உடையில் அங்கு வரும் தன்ஷிகா, இவர்கள் […]
-
கேணி – திரை விமர்சனம்
நேர்மையான அரசு அதிகாரியின் மனைவி ஜெயப்பிரதா. சில சூழ்ச்சி காரர்களால் இவரது கணவர் ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராதவிதமாக திடீரென இறந்துவிடுகிறார். கணவரின் கடைசி ஆசைக்கேற்ப சொந்த கிராமத்திற்கு செல்கிறார் ஜெயப்பிரதா. இவரோடு தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞனின் மனைவியான பார்வதி நம்பியாரும் செல்கிறார். இவர்கள் போகும் இடத்தில் மக்கள் தண்ணீரின்றி தினந்தினம் செத்து மடிவதைக் கண்டு மனம் வருந்துகிறார் ஜெயப்பிரதா. அதே நேரத்தில் தன் வீட்டுத் தோட்டக் கேணியில் வற்றாத நீர்வளம் இருப்பதைக் […]
-
நாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம்
நாயகன் ஆரி நேர்மையான வீட்டு புரோக்கர். யாரையும் ஏமாற்றி, பொய் சொல்லி வீட்டு மனைகளை விற்கக் கூடாது என்ற கொள்கைகளை பின்பற்றி வருகிறார். அம்மா, தம்பி மற்றும் வாய்பேச முடியாத தங்கை அதுல்யா என இவர்களது குடும்ப பாரத்தை ஒரு நல்ல வேலையில் இருக்கும், ஆரியின் தம்பி கவனித்துக் கொள்கிறார். பொய் சொல்லி பணம் சம்பாதிக்க தெரியாமல் இருக்கும் தனது மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவன் ஒரு வழிக்கு வருவான் என்று ஆரியின் அம்மா பெண் […]
-
ஏண்டா தலையில எண்ண வெக்கல – திரை விமர்சனம்
இன்ஜினியரிங் படிப்பை சரியாக முடிக்காத நாயகன் அசார், தன் நண்பர் சிங்கப்பூர் தீபனுடன் வேலைத் தேடி வருகிறார். எந்த கம்பெனியிலும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இப்படி வேலை ஒவ்வொரு கம்பெனியாக அழையும் அசார், நாயகி சஞ்சிதாவை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். அவர் பின்னாடியே சுற்றி ஒரு வழியாக அவரையே காதலிக்க வைத்து, நிச்சயதார்த்தம் வரை சென்றுவிடுகின்றார். இந்நிலையில், அசாருக்கு ஒரு குரல் கேட்கின்றது. அந்த குரல், தான் எமதர்மன் என்றும், தலையில் எண்ணெய் வைக்காமல் இருப்பதால் உன்னை […]