Welcome, visitor! [ Register | Login

Post Free Ad

About admin

  • Member Since: June 10, 2017

Description

 

ajmeer traders in karur

ajmeer traders in karur Gift Articles in karur

karur

54 total views, 0 today

 

P M Fancy Store

P M Fancy Store Gift Articles in karur

Karur Ho

66 total views, 0 today

 

Subbu Cards-Karur

Subbu Cards-Karur Gift Articles in karur

67 total views, 2 today

 

Cyeclon Fancy Store

Cyeclon Fancy Store Gift Articles in karur

Karur

66 total views, 1 today

 

Ceylon Fancy Stores

Ceylon Fancy Stores Gift Articles in karur

Karur

61 total views, 0 today

 

Megamart Stores(Karur)

Megamart Stores(Karur) Garment Retailers in karur

62 total views, 0 today

 

Kangaroo Impex .

Kangaroo Impex . Gift Articles in karur

malathi9758620459West Karur

63 total views, 1 today

 

Ashok Garments,

Ashok Garments, Garment Retailers in karur

mg road, Bharathi Nagar

60 total views, 0 today

 

Ramakrishnan. N-Karur

Ramakrishnan. N-Karur Gift Articles in karur

64 total views, 0 today

 

Ajmeer Traders – Karur

Ajmeer Traders – Karur Gift Articles in karur

49 total views, 3 today

 

Yazh Printers

Yazh Printers – Services in karur

Mr Duraisamy PKarur Ho

56 total views, 0 today

 

Santham Emporium-karur

Santham Emporium-karur Gift Articles in karur

65 total views, 0 today

 

Ajmal Basha S N-Karur

Ajmal Basha S N-Karur Gift Articles in karur

69 total views, 0 today

 

Abdul Bary K-karur

Abdul Bary K-karur Gift Articles in karur

63 total views, 0 today

 

ceylon fancy stores in karur

ceylon fancy stores in karur Gift Articles in karur

karur

49 total views, 1 today

 

ANG AAR M & Co-Karur

ANG AAR M & Co-Karur Gift Articles in karur

66 total views, 1 today

 

mohan and sons in karur

mohan and sons in karur Gift Articles in karur

karur

60 total views, 1 today

 

Santha Corporation-Karur

Santha Corporation-Karur Gift Articles in karur

56 total views, 0 today

 

G J Home Collections,

G J Home Collections, Garment Retailers in karur

1st road, Kovai Road,

57 total views, 1 today

 

AKB Traders-Karur

AKB Traders-Karur Gift Articles in karur

S.G. Puram

61 total views, 1 today

 

Ceylon Fancy Stores-Karur

Ceylon Fancy Stores-Karur Gift Articles in karur

65 total views, 1 today

 

Abinaya Fancy Centre-Karur

Abinaya Fancy Centre-Karur Gift Articles in karur

52 total views, 0 today

 

Badma Fancy Store-Karur

Badma Fancy Store-Karur Gift Articles in karur

49 total views, 1 today

 

Kings Paradise-karur

Kings Paradise-karur Gift Articles in karur

59 total views, 0 today

 

vaishali novelty and fancy in karur

vaishali novelty and fancy in karur Gift Articles in karur

karur

45 total views, 1 today

 

ramakrishnan.n in karur

ramakrishnan.n in karur Gift Articles in karur

karur

64 total views, 1 today

 

badma fancy store in karur

badma fancy store in karur Gift Articles in karur

karur

54 total views, 0 today

 

Jyothi Fancy Store-Karur

Jyothi Fancy Store-Karur Gift Articles in karur

57 total views, 0 today

 

Duty Centre-Karur

Duty Centre-Karur Gift Articles in karur

65 total views, 0 today

 

A R B & Sons-Karur

A R B & Sons-Karur Gift Articles in karur

56 total views, 0 today

 

Sri Thiruppathi Tex .

Sri Thiruppathi Tex . Gift Articles in karur

Sri Thiruppathi9758620014Pasupathi PalayamPOST

61 total views, 0 today

 

ragavendra in karur

ragavendra in karur Gift Articles in karur

karur

57 total views, 0 today

 

Malar Family Aid Corporation-Karur

Malar Family Aid Corporation-Karur Gift Articles in karur

S.G. Puram

45 total views, 0 today

 

Mohan & Sons-karur

Mohan & Sons-karur Gift Articles in karur

Senguntha Puram

66 total views, 0 today

 

JRK Garments, karur

JRK Garments, karur Garment Retailers in karur

Ramakrishnapuram

61 total views, 1 today

 

Rbs Tex .

Rbs Tex . Generator Dealers in karur

hari9865986321Krishnaraya Puram

54 total views, 1 today

 

duty center in karur

duty center in karur Gift Articles in karur

karur

56 total views, 0 today

 

akb traders in karur

akb traders in karur Gift Articles in karur

karur

56 total views, 0 today

 

Vaishali Novelty And Fancy-Karur

Vaishali Novelty And Fancy-Karur Gift Articles in karur

61 total views, 0 today

 

SP-Karur

SP-Karur Govt Office in karur

53 total views, 0 today

 

abinaya fancy center in karur

abinaya fancy center in karur Gift Articles in karur

karur

51 total views, 1 today

 

Karur Paradise-Karur

Karur Paradise-Karur Gift Articles in karur

58 total views, 1 today

 

Ragavendra-Karur

Ragavendra-Karur Gift Articles in karur

Muruganathapuram

58 total views, 0 today

 

Ajmeer Traders-Karur

Ajmeer Traders-Karur Gift Articles in karur

64 total views, 0 today

 

Divya Fabrics, Kamaraj Road, Karu

Divya Fabrics, Kamaraj Road, Karu Gift Articles in karur

Near Krishna Plywood Shop

51 total views, 0 today

 

Bombay Dyeing

Bombay Dyeing Garment Retailers in karur

Karur

64 total views, 1 today

 

Classic Excellence Paradise-Karur

Classic Excellence Paradise-Karur Gift Articles in karur

43 total views, 0 today

 

Sri Kamatchi Fancy

Sri Kamatchi Fancy Gift Articles in karur

Mr Ramaliagam KVengamedue

66 total views, 0 today

 

Royall craft and co

Royall craft and co Gift Articles in karur

royal8122169081karur

64 total views, 0 today

 

jyothi fancy stores in karur

jyothi fancy stores in karur Gift Articles in karur

karur

56 total views, 0 today

Page 1 of 1361 2 3 136

BJP-PDP alliance breaks, Mehbooba quits as J&K CM, opposition seeks fresh polls; anti-terror ops set to intensify

News Tamilnadu 4 hours ago

The BJP on Tuesday pulled out of the three-year-old ruling coalition with the PDP in J&K and called for Governor’s rule, saying it had become ‘untenable’ to continue in the alliance government. 

2 total views, 2 today

Tri-service India-Russia military exercise scheduled for late 2018

News Tamilnadu 4 hours ago

A Russian military delegation has visited India to discuss the logistics of the exercise.

2 total views, 2 today

''மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது'' – அமைச்சர் உதயகுமார் பெருமிதம்

News Tamilnadu 4 hours ago

‘எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் எங்கே அமையவிருக்கிறது…’ என்ற நீண்டநாள் கேள்விக்கு ‘மதுரை’ என்று பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த உத்தரவு குறித்து, மதுரை மேலூரில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார், ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருப்பது அ.தி.மு.க அரசின் சாதனை’ என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில், ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையின் மூலம் மருத்துவக் கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, உயர்தர சிகிச்சை போன்ற பல்வேறு சேவைகள் அளிக்கப்படும். எனவே, இம்மருத்துவமனையை அமைக்க வசதியாக 200 ஏக்கர் நிலம் மற்றும் தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் வேண்டும்.

இவ்விதிகளை உள்ளடக்கி மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, தமிழகத்தில் 5 இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதன்படி, தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் தோப்பூர், ஈரோட்டில் பெருந்துறை மற்றும் செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு, இவற்றில் ஏதாவதொரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கருத்துருவும் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வந்த போதிலும், தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் பல்வேறு தடைகள் குறுக்கிட்டன. இதையடுத்து நீண்ட நாட்களாக இத்திட்டம் இழுபறி நிலையில் இருந்துவந்தது.

இந்நிலையில், இன்று மேலூரில் நடைபெற்ற ‘காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றிவிழாப் பொதுக்கூட்ட’த்தில் பேசிய அமைச்சர் உதயகுமார், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்தான மத்திய அரசின் உத்தரவினை மேடையிலேயே படித்துக்காட்டினார். ”மத்திய அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில், எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரையில் தோப்பூர் பகுதியில் அமையவிருக்கிறது என்ற நல்ல தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது அ.தி.மு.க அரசுதான்” என்றார் அமைச்சர் உதயகுமார். மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தமிழகத்தின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியிருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

2 total views, 2 today

NN Vohra recommends Governor`s Rule in Jammu and Kashmir as PDP-BJP alliance collapses

News Tamilnadu 4 hours ago

Under the provision of Section 92 of the Jammu and Kashmir Constitution, Governor’s Rule is imposed for six months, but only after the consent of the President of India.

2 total views, 2 today

இங்கிலாந்து அதிரடி..! 481 ரன்கள் குவித்து உலக சாதனை

News Tamilnadu 4 hours ago

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 481 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இன்று நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேஸன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடியாக ஆடினர். அதிரடியாக ஆடிய ஜோஸன் ராய் 82 ரன்கள் குவித்து, ரன்அவுட் ஆனார். பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேலிஸூம் அதிரடியாக ஆடினார். அதிரடியாக பேர்ஸ்டோ 92 பந்துகளில் 139 ரன்களும், ஹேலிஸ் 92 பந்துகளில் 147 ரன்களும் குவித்தனர். அடுத்ததாக மோர்கன் அதிரடியாக 67 ரன்கள் குவித்தார். அதனையடுத்து, இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்டுசன் 3 விக்கெட்டுகளைக் குவித்தார். Photo Courtasy: ICC twitter page

2 total views, 2 today

நீதிமன்ற உத்தரவை மீறியதாக சி.பி.எம் மாவட்டச் செயலாளர் உள்பட 1,720 பேர் மீது வழக்கு பதிவு!

News Tamilnadu 4 hours ago

பொதுக்கூட்டம் நடத்திட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த வழிகாட்டு உத்தரவை மீறியதாக கூறி, சி.பி.எம்., கட்சியின், துாத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் உட்பட 1,720 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துாத்துக்குடியில் கடந்த மே 22ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி, மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது. உடனே, கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், பேரணி மற்றும் பொதுக்கூடடம் நடத்த அனுமதிகேட்டு, வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சில நிபந்தனைளின் அடிப்படையில் அனுமதி வழங்கியது. இந்த உத்தரவின்படி, பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளித்தது மாவட்டக் காவல்துறை. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு நேற்று (18.06.16) அக்கட்சியின் கண்டன பொதுக்கூட்டம் , மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தில்,கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேசுகையில், “;துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்டவர்களை, சந்திக்க எங்கள் கட்சியின் அகில இந்திய செயலாளர், பிரகாஷ்கராத் வரும் போதே, நாங்கள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம். அப்போது நிலவிய பதட்டத்தை காரணம் காட்டி, அனுமதி மறுக்கப்பட்டது.தற்போது, அமைதி திரும்பிய பின் கூ்டடத்திற்கு அனுமதி கேட்டும் அனுமதி வழங்க காவல்துறை மறுத்தது. அதனால், நாங்கள் நீதிமன்றத்தை அணுகி, அனுமதி பெற்றோம். நீதிமன்றமும், மாவட்டத்தில் காலியான இடத்தில் கூட்டம் நடத்திக் கொள்ளலாம். கூட்டத்திற்கு, மாலை 6 மணிமுதல் 8 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு. கூட்டத்தில், பிருந்தா காரத், உ.வாசுகி ஆகிய இரண்டு சிறப்பு பேச்சாளர்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்படுகிறது. கூட்டத்திற்கு1,000 பேருக்கு மேல் வர அனுமதியில்லை. ஆரம்பம் முதல் கூட்டம் போலீஸாரால் பதிவு செய்யப்படும். இந்த கூட்டத்தில் வீதி மீறப்பட்டாலோ அசம்பாவிதம் ஏதும் நடந்தாலோ கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் பொறுப்பேற்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்தது. ஒரு தேசிய கட்சிக்கு தங்களின் கருத்தைச் சொல்ல நீதிமன்றம் இத்தனை நிபந்தனைகளை விதித்துள்ளது”; என்றார். இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர், அர்ச்சுணன் மீது தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலை மீறி அதிகமான மக்களை கூட்டியதற்காக, ஐ.பி.சி., 188வது பிரிவின் கீழ், அர்ச்சுணன் உட்பட, 1,720 பேரின் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

2 total views, 2 today

அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவால் யானைக்கு நேர்ந்த சோகம்!

News Tamilnadu 4 hours ago

கும்பகோணத்தில் அறநிலையத்துறை அதிகாரிகளின் உத்தரவால் கோயில் யானை கடந்த ஒரு வாரமாக ஒரே இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயில் யானை மங்களத்தை வெளியே எங்கும் அழைத்து செல்லாமல்,பக்தர்களுக்கு ஆசியும் வழங்காமல் ஒரே இடத்தில் கட்டி போட்டிருந்ததால் மங்களத்தின் கால்கள் வீங்கி அவதிபட்டு வருகிறது. வெளியே எங்கும் அழைத்து செல்லகூடாது என அறநிலையத்துறையின் அதிகாரிகள் கூறியதனாலேயே யானைக்கு இந்த நிலைமை என பக்தர்கள் புகார் வாசிக்கிறார்கள். கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த கோயிலில் மங்களம் என்ற யானை உள்ளது. 1989ம் ஆண்டு காஞ்சி மகாபெரியவர் மங்களம் யானையை இந்த கோயிலுக்காக வழங்கினார். தற்போது யானை மங்களத்துக்கு 50 வயதாகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மங்களத்திடம் ஆசி வாங்கி கொண்டுதான் செல்வார்கள்.அந்த அளவிற்கு பக்தர்களுடன் கலந்திருந்தது யானை மங்களம். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அதன் தாழ்வாரத்திலேயே யானை மங்களம் கட்டியே கிடந்தது.யானையை வெளியே எங்கும் அழைத்து செல்லவில்லை. கொஞ்சம் கூட நடக்க விடாததால் யானையின் கால்கள் வீங்கியது. இதனால் பல வகையில் அவதிப்பட்டு வருகிறது மங்களம். மேலும் யானை கட்டியே கிடந்தால் மனரீதியாக பாதிக்கப்பட்டு மதம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே சளி பிரச்னையால் மங்களம் யானை அவதிப்பட்டு வந்தது. இப்போது கால்கள் வீங்கியதோடு ஒரே இடத்தில் இருந்ததால் புத்துணர்ச்சி இல்லாமலும் காணப்படுகிறது. எனவே அறநிலையத்துறை நிர்வாகம் உடனடியாக கும்பேஸ்வரன் கோயில் யானை மங்களத்தை வெளியில் நடக்க விடுவதோடு பக்தர்களுக்கு ஆசி வழங்கவும் தினம்தோறும் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய பக்தர்கள், “யானைகள் ஒரே இடத்தில் இருந்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதற்காகவே அரசு ,ஒவ்வொரு வருடமும் முதுமலை முகாமுக்கு புத்துணர்ச்சிக்கு அனுப்பி வைக்கிறது.ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் யானைகள் விஷயத்தில் அக்கறை காட்டுவதே இல்லை.மேலும் கடந்த இருபது நாள்களுக்கு முன்பு சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்து பாகனையே மிதித்து கொன்றது. இந்த சம்பவத்தை காரணம் காட்டியே யானைகள் விஷயத்தில் அக்கறை காட்டாமல் ஒரே இடத்தில் கட்டி வைக்க சொல்லி பாகன்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள் அதிகாரிகள். இதுபோன்ற செயல்களால் யானை மேலும் பாதிக்கப்படும்’’ என்றனர். இதுகுறித்து கோயில் ஊழியர் கூறுகையில், “மங்களம் யானை தினம்தோறும் வாக்கிங் சென்று விட்டு காலையிலேயே கோவில் வளாகத்தில் வந்து நின்று விடும். பின்னர் மதியமும் வெளியே சென்று விட்டு மாலையில் வந்து நின்று பொதுமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும். இந்நிலையில் திடீரென கோயில் நிர்வாகத்தினர் யானையை வெளியில் அழைத்து செல்ல வேண்டாம் என்றதோடு, ஆசி வழங்கவும் நிறுத்த வேண்டாம் என பாகனிடம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததையடுத்து எங்களிடம் சொன்னார்கள். அதனாலேயே ஒரே இடத்தில் கட்டியிருந்தது. இதனால் மங்களத்திற்கு கால்கள் வீங்கி தற்போது அதற்கு மருந்து போட்டு வருகிறோம்’’ என்றார்.

2 total views, 2 today

சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்று! – ராமேஸ்வரத்தில் ரயில்கள் புறப்படுவதில் தாமதம்

News Tamilnadu 4 hours ago

ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுழன்று அடிக்கும் சூறாவளி காற்றினால் ராமேஸ்வரத்திலிருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் கடந்த இரு நாள்களாக தாமதமாகப் புறப்பட்டுச் செல்கின்றன.

தென்மேற்கு பருவமழை தேனி,திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான ராமேஸ்வரம் பகுதியில் கடந்த இரு நாள்களாக சூறாவளிக் காற்று சுழன்று அடித்து வருகிறது. மணிக்கு 55 கி.மீ வேகத்திற்கு மேலாக காற்று வீசி வருகிறது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக உள்ளது. இதையடுத்து தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாலை நேரங்களில் ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் ரயில்கள் காற்றின் வேகத்தினால் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. நேற்று ராமேஸ்வரத்திலிருந்து செல்ல வேண்டிய மதுரை பயணிகள் ரயில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து மாலையில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட திருப்பதி மற்றும் சென்னை விரைவு ரயில்கள் பாம்பன் பாலத்தில் செல்ல சிக்னல் கிடைக்காததால் பாம்பன் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்பட்டு 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இன்றும் காற்றின் வேகம் குறையாததால் மதுரையில் இருந்து வந்த பயணிகள் ரயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து மதுரைக்கு சென்றது. இதேபோல் மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை விரைவு ரயில் இரவு 7 மணி வரை புறப்படாத நிலையில் ராமேஸ்வரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

2 total views, 2 today

`ஜம்மு – காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி’?

News Tamilnadu 4 hours ago

ஜம்மு – காஷ்மீரில் அம்மாநில அரசிற்கு வழங்கிய ஆதரவை பாஜக திரும்ப பெற்றதால், ஆளுநர் ஆட்சி அமலுக்குவரும் என தகவல் வெளியாகியுள்ளது. Photo Credit: ANI ஜம்மு – காஷ்மீரில் மொத்தம் 87 சட்டபேரவை தொகுதிகள் உள்ளன. இதில் மக்கள் ஜனநாயக கட்சியுடன், பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வந்தனர். இந்நிலையில் இன்று மக்கள் ஜனநாயக கட்சிக்கு, தாங்கள் அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக பா.ஜ.க அறிவித்தது. இதனால் அம்மாநிலத்தில் குழப்பம் ஏற்பட்டது. பா.ஜ.க ஆதரவை வாபஸ் பெற்றதால், 28 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்தது. ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்பதால், அம்மாநில முதல்வரான மெஹபூபா முஃப்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அந்த தகவலைக் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாக மறுத்தார். தற்போது இந்த சூழல் குறித்து விளக்கியும், ஜம்மு – காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த கோரியும் மத்திய அரசிற்கு அம்மாநில ஆளுநர் என்.என்.வோரா பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விரைவில் ஜம்மு – காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

2 total views, 2 today

ஜெயலலிதா இருந்திருந்தால்கூட இந்தளவுக்கு நடந்திருக்காது’ – வளர்மதியின் தந்தை காட்டம்

News Tamilnadu 4 hours ago

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக சேலத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று காலை ஆச்சாங்குட்டப்பட்டியில் நில அளவீடு செய்து முட்டுக்கல் நடும் பணி நடைபெற்று வந்தது. அந்த இடத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சமூக ஆர்வலரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவியுமான வளர்மதி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். பொதுமக்களைப் போராட வளர்மதி தூண்டுகிறார் என்று போலீஸார் குண்டுக் கட்டாக வளர்மதியைத் தூக்கி வேனில் ஏற்றினார்கள்.

இதையடுத்து வீராணம் பள்ளிக்கடத்தானூரில் உள்ள வளர்மதியின் வீட்டுக்குச் சென்றோம். வீட்டில் வளர்மதியின் அப்பா மாதையன் எந்த ஒரு பதற்றமோ படபடப்போ இல்லாமல் கூலாக வெளியே வந்து நம்மிடம் பேசினார், ”இந்த ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உரிமை இல்லையா. எதற்காக என் மகளைக் கைது செய்ய வேண்டும். அப்படி என்ன இந்த ஆட்சியாளர்களைவிட என் மகள் குற்றம் செய்து விட்டாள். 8 வழிச் சாலை என்பது மக்களுக்கான திட்டம் இல்லை. மக்கள் டெய்லியும் சென்னைக்கு வேலைக்குப் போயிட்டு சீக்கிரமாகச் சேலம் வர வேண்டும் என்பதற்காகவா இந்தத் திட்டம் போடுகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள வளங்களைக் கொள்ளையிட்டுக்கொண்டு போவதற்கே இந்த 8 வழிச் சாலை போடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கமிஷன் வாங்கி சாப்பிட்டுவிட்டு மக்கள் செத்தால் என்ன, நாசமா போனால் என்ன என்று இருக்கிறார்கள்.

ஆனால், என் பொண்ணால் அப்படி இருக்க முடியாது. எங்கெல்லாம் மக்களுக்கு ஆபத்தோ அங்கெல்லாம் இருப்பாள். என் மகள் எப்போதும் தவறு செய்ய மாட்டார். நியாயத்துக்காகக் குரல் கொடுப்பார். காலையில் வளர்மதி கைது செய்யப்பட்டதை நானும் டி.வி-யைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். காவல்துறை சொல்லுவார்கள் என்று மாலை வரை வெயிட் பண்ணி பார்த்தேன். சட்டத்தின் ஆட்சி நடந்தால்தானே சொல்லுவார்கள். தமிழகத்தில் காட்டாட்சி நடக்கும்போது எப்படி என் மகள் கைது செய்ததை பெற்றோரிடம் சொல்வார்கள். ஜெயலலிதா இருந்தால்கூட இந்தளவுக்கு நடந்திருக்காது. விவசாய மக்களை அடக்குமுறை மூலம் அச்சுறுத்துகிறார்கள். என் மகள் அடக்குமுறைக்கு எப்போதும் அஞ்ச மாட்டாள். பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்பாள்” என்றார்.

2 total views, 2 today

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர்!

News Tamilnadu 4 hours ago

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஒருவர் உடலில் மண்ணெண்னை ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிரசித்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான இக்கோயிலிலுக்கு சுவாமி தரிசனம் செய்யவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் தினமும் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்வது வழக்கம். இதனால் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளின் கூட்டம் எப்போதும் அதிகமாகவே காணப்படும். இந்நிலையில், இன்று மாலையும் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 5.30 மணி அளவில், பேருந்து நிலையத்திற்குள்ளேயே உள்ள, பொது நூலகம் முன்பு திடீரென 45 வயது மதிக்கதக்க ஒருவர் உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில், அவரது உடலில் குபீரென தீ பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். சிலர் அருகிலிருந்தவர்கள் சணல் சாக்கினை உடம்பில் போர்த்தி தீயை அணைத்தனர். சில நிமிடங்களில் உடல் முழுவதும் தீயில் வெந்து போனது. உடனடியாக 108 ஆம்புலென்ஸுக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலென்ஸ் வர சிறிது தாமதம் ஏற்பட்டது. அதனால், போலீஸார் பொதுமக்கள் உதவியோடு மினிவேனில் தீக்காயத்துடன் போராடிய நபரை ஏற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடல் முழுவதும் 80 சதவீதம் தீயில் கருகியதாக தெரிவித்தனர். பின்பு, 108 ஆம்லென்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தீ வைத்துக்கொண்ட நபர், அம்பாசமுத்திரம் பள்ளிவாசல் தெரு செய்யது மகன் காதர் என அவர் கூறியதாகப் போலீஸார் கூறினர். அந்த நபர் உண்மையில் அந்த முகவரியை சேர்ந்தவர் தானா? எதனால் தீவைத்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தில், அதுவும் கூட்டம் சேரக்கூடிய மாலை நேரத்தில் ஒருவர், உடலில் தீவைத்து கொண்ட சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No views yet

ராமநாதபுரம் குடிநீர் தேவைக்காக 107 இடங்களில் சுத்திகரிப்பு மையங்கள்! – அமைச்சர் மணிகண்டன் தகவல்

News Tamilnadu 4 hours ago

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்க்கும் வகையில் 107 கிராம பகுதிகளில் உப்பு நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் மணிகண்டன் ஆய்வு நடத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன் ”மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியான சூழலில் பொதுமக்களுக்கு சீரான வகையில் குடிநீர் வழங்க ரூ.11.26 கோடி செலவில் 396 குடிநீர் திட்ட பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 187 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக உள்ள கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் மாவட்டத்தில்107 இடங்களில் உப்பு நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் 33 நிலையங்களை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ளன. திருவாடானை பகுதியில் ஆய்வு செய்யப்பட்டதில் 1200 அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் உள்ளது. இதனை ஆழ்குழாய் மூலம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர ராமநாதபுரத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் அரசு அலுவலர் குடியிருப்பு அமைக்கவும், ராமேஸ்வரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கவும் தேவையான நிலங்களை கண்டறிந்து தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளேன்” என்றார்.

No views yet

அமைச்சர் பூஜைக்கு அதிருப்தி.. போட்டி பூமி பூஜை நடத்திய பா.ஜ.க!

News Tamilnadu 4 hours ago

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் கேஸ் கம்பெனி முதல், மத்தம்பாளையம் வரையிலான 6 கிலோ மீட்டர் 2 வழிச் சாலை தேசிய நெடுஞ்சாலையை, 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு, மத்திய அரசு 40.63 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதற்கான பூமி பூஜை வீரபாண்டிபுரிவு பகுதியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள பா.ஜ.க-வினர், “;மத்திய அரசு நிதியில் செயல்படுத்தபடும் இத்திட்ட தொடக்க விழாவில், மத்திய அரசு அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர். மத்திய அரசு தொடர்பாக ஒரு பேனர் கூட வைக்கவில்லை”; என்று கூறி, 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி, அங்கிருந்த ஓர் அறையில் அமர வைத்தனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த அமைச்சர் வேலுமணி, சாலை விரிவாக்கத்திற்கான பூமி பூஜையை நடத்தி பணிகளைத் தொடங்கி வைத்தார். அமைச்சர் அங்கிருந்து சென்ற பிறகு, வெளியே வந்த பா.ஜ.க-வினர், மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் அடித்து, போட்டி பூமி பூஜையினை அதே பகுதியில் நடத்தினர். அதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். ஆனால், போலீஸாரின் எதிர்ப்பை மீறி, பா.ஜ.க-வினர் போட்டி பூமி பூஜை நடத்தினர். இதனால், போலீஸாருக்கும், பா.ஜ.க-வினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

2 total views, 2 today

`போலீஸார் பொய் வழக்குப் போட்டுள்ளனர்!’ – இளைஞரின் விநோத எதிர்ப்பு

News Tamilnadu 4 hours ago

பொய் வழக்கு போட்ட எஸ்.பி. தர்மராஜ் மற்றும் அதற்குக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் ஒருவர் தன் தலையின் வலது பக்கத்தில் மட்டும் மொட்டை அடித்து கொண்டததோடு, அதே பக்கத்தின் ஒரு பகுதி மீசையை எடுத்து கொண்டும் நீதிமன்றத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே நெம்மேலி வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராகவும், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டு இயக்க ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவர் காலை 11 மணிக்கு மேல் தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது தனது தலையில் வலது பக்கம் மட்டும் மொட்டையடித்துக் கொண்டு, அதே பக்கத்தில் ஒரு பகுதி மீசையை எடுத்துக் கொண்டும் கோர்டுக்கு வந்தவர் நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் முன்பு ஆஜரானார். நீதிபதி அவரை வரும் ஜூலை மாதம் 25ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டதை தொடர்ந்து ஜெயக்குமார் தனது வக்கீல் உதயசூரியனுடன் கோர்ட்டை விட்டு வெளியே வந்தவரிடம் பேசினோம்.

“கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி ஒக்கநாடு மேலையூரைச் சேர்ந்த 3 பேர் ஜாதி பெயரை சொல்லி தாக்கியதில் ஒரத்தநாடு சமயன்குடிக்காட்டைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்து மருத்துவமையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை சமயன்குடிக்காட்டைச் சேர்ந்த விக்னேஷ் தனது நண்பருடன் பார்த்து விட்டு வந்தார். அப்போது ஒக்கநாடு மேலையூரைச் சேர்ந்த நான்(ஜெயக்குமார்) மற்றும் எனது நண்பர்கள் 10 பேர் சேர்ந்து விக்னேஷை வழிமறித்து ஜாதி பெயரைச்சொல்லி தாக்கியதாகவும், அவரை கடத்தி சென்று எங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நீங்கள் சென்று பார்த்தது தவறு என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த சமயத்தில் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன்பேரில் ஒரத்தநாடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அப்போது தஞ்சை எஸ்.பியாக இருந்த தர்மராஜன், ஒரத்தநாடு டி.எஸ்.பியாக இருந்த செங்கமலகண்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில் என்மீது ஒரத்தநாடு போலீஸார் பொய்யாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். மேலும் 7 வழக்குகள் பதிவு செய்து இரவோடு இரவாக என்னை தேடி வந்து, ஏதோ தீவிரவாதியைப் பிடிப்பது போல் என்னை பிடித்து சென்றனர். நான் 12 நாள்கள் பட்டுக்கோட்டை சிறையில் இருந்தேன். ஜாமீனில் வெளிவந்த நான், ஒரு மாத காலம் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டும் வந்தேன்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு எனக்கு சம்மன் வந்தது. எனது சொந்த ஊர் பாப்பாநாடு அருகே நெம்மேலி வடக்கு. ஆனால் போலீஸார் பொய்யான வழக்கு பதிவு செய்வதற்காக ஒக்கநாடு மேலையூர் என்று எனது முகவரியை தவறாக பதிவு செய்தனர். தஞ்சையில் எஸ்.பியாக இருந்த தர்மராஜன், ஒரத்தநாட்டில் டி.எஸ்.பியாக இருந்த செங்கமலகண்ணன் ஆகிய இருவரும்தான் என் மீது பொய் வழக்கு போட்டனர். இதை கண்டித்து மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஒரத்தநாட்டில் அப்பொழுது உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.

என் மீது பொய் வழக்கு போட்டதால் நான் பல துன்பங்களை அனுபவித்து வருகிறேன். எனவே பொய் வழக்கு போட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே எனது தலையில் வலது பக்கத்தை மட்டும் மொட்டை அடித்து கொண்டதோடு,அதே பகுதியில் ஒரு பக்க மீசையை எடுத்துக்கொண்டும் கோர்ட்டிற்கு வந்தேன். என்னை விசாரித்த நீதிபதி நான் இப்படி வந்தது குறித்து எந்தவித கேள்வியும் கேட்கவில்லை. மறு தேதியை குறிப்பிட்டு அந்த தேதியில் ஆஜராகும்படி மட்டும் சொன்னார். என்னை போல் நிறைய நபர்கள் மீது எஸ்பி தர்மராஜன் இங்கு பணியில் இருந்தபோது பொய்யாக வன்கொடுமை தடுப்பு வழக்கு போட்டுள்ளார். இவ்வாறு பொய் வழக்கு போட்ட எஸ்.பி. தர்மராஜன் உள்ளிட்ட போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி வந்தேன்’’ என்றார்.

No views yet

`இன்ஜின் அறைக்குள் புகுந்த கடல் நீர்!’ – நடுக்கடலில் மீனவர்களை மீட்ட கடலோரக் காவல்படை

News Tamilnadu 4 hours ago

சென்னையிலிருந்து 98 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களைக் கடலோரக் காவல்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது `பழனிமுருகன்’ என்ற பெயர் கொண்ட படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதில் சென்னையைச் சேர்ந்த 9 மீனவர்கள் பயணம் செய்துள்ளனர். இந்தநிலையில், கடலில் 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் தத்தளிப்பதாகக் கடலோரக் காவல்படைக்குத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலையடுத்து கடலோரக் காவல்படையினர் மீனவர்கள் தத்தளித்துவரும் இடத்தைக் கண்டறிந்து அப்பகுதிக்கு விரைந்தனர். சென்னை பதிவெண் கொண்ட படகில் தத்தளித்து வந்த மீனவர்களைக் கடலோரக் காவல்படை மீட்டனர். இதுகுறித்து கடலோர காவல்படையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்ட மீனவர்கள் இரவுக்குள் சென்னையை வந்தடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் தத்தளித்த மீனவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கடலோரக் காவல்படையினர் தெரிவித்துள்ளனர். படகில் உள்ள இன்ஜின் அறையில் கடல்நீர் புகுந்ததால் படகில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

2 total views, 2 today

BJP breaks alliance with PDP in J&K, Mehbooba Mufti and her ministers resign

News Tamilnadu 13 hours ago

The resignations were sent to state governor Narinder Nath Vohra.

No views yet

Youth gets 3 years in jail for sexually harassing minor girl

News Tamilnadu 13 hours ago

According to the prosecution, the 16-year-old girl was sexually harassed by Kamal Kumar when she was alone in her house on November 5, 2014.

No views yet

Chandigarh bans private coaching classes during school hours

News Tamilnadu 13 hours ago

“It has also come to the notice that the teachers of several government schools and private schools are hand in glove,” Joshi pointed out.
 

No views yet

JEE (Mains), NEET exams to be held again in December 2018? Here are the details

News Tamilnadu 13 hours ago

The Indian Institute of Technology (IIT) Kanpur will be the first institute to conduct JEE (Mains) under NTA in December 2018. 

No views yet

' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை!' – எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்

News Tamilnadu 13 hours ago

சேலம் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை விதைத்துள்ளது சேலம் டு சென்னை வரையிலான எட்டு வழி பசுமைச் சாலை. ‘ திட்டம் குறித்து மக்கள் பேசவே கூடாது என அரசு நினைக்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாயில் கோயம்புத்தூர் – சென்னை, கன்னியாகுமாரி – சென்னை இடையே ஏற்கெனவே இருக்கிற இருவழி ரயில் பாதைகளின் அருகில் தனியாக சரக்கு ரயில் போக்குவரத்துக்கான பாதை அமைக்கப்பட்டால் பயனுள்ள திட்டமாக மாறும்’ என்கிறார் பா.ம.க முன்னாள் எம்.பி டாக்டர் இரா.செந்தில்.

சேலம் முதல் சென்னை வரையிலான பசுமைச் சாலையை அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது தமிழக அரசு. இதற்கான ஆட்சேபனைக் கூட்டம், கடந்த வாரம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள், திட்டம் தொடர்பான தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர். ‘இந்தக் கூட்டத்துக்குள் வெளியாட்கள் வந்துவிடக் கூடாது’ என்பதற்காக, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் மனு கொடுக்க வந்தவர்கள், அச்சத்துடனேயே கிளம்பினர். பசுமை வழிச் சாலையால் அழிக்கப்பட இருக்கும் மலைகள், ஆறுகள், காடுகள் குறித்துத்தான் சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எட்டு வழிச்சாலை குறித்துப் பேசி வந்த நடிகர் மன்சூர் அலிகான், பியூஸ் மனுஷ், வளர்மதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ந்து போன மனித ஆர்வலர்கள், ‘ சூழலுக்கு பாதிப்பில்லாமல் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தால், கைது செய்வதுதான் தீர்வா?’ எனக் கொந்தளிக்கின்றனர். இந்நிலையில், பசுமை வழிச்சாலை திட்டத்துக்குப் பதிலாக புதிய திட்டம் ஒன்றை முன்வைக்கிறார் முன்னாள் எம்.பி டாக்டர்.செந்தில். அவரிடம் பேசினோம்.

மாற்றுத் திட்டம் எளிது!

‘ இப்படித்தான் நீங்கள் செயல்பட வேண்டும் என நாங்கள் முடிவுகளைச் சொல்லவில்லை. சில கண்ணோட்டங்களைத்தான் சொல்கிறோம். நோய் வாய்ப்படும் மக்கள், தங்களுக்கான சிகிச்சையை தேர்வு செய்வதில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இந்த அரசாங்கம், அப்படி எந்த வாய்ப்பையும் வழங்காமல் தீர்மானமாக ஒன்றை முடிவு செய்துவிட்டு அறிவிப்பதுதான் தவறு என்று சொல்கிறோம். இந்தியாவில் நிலம் கையகப்படுத்தும் திட்டங்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. காரணம், இதனால் ஏற்படும் மனஉளைச்சல், தொழில் பாதிப்புகள் உள்ளிட்டவை . அதுவே, இங்கிலாந்தில் நிலம் கொடுக்க வேண்டும் என்றால், மக்கள் மகிழ்ச்சியாக ஒப்படைக்கிறார்கள். அங்கு மக்களுக்குத் தேவையான இழப்பீட்டைக் கொடுக்கிறார்கள். சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து மக்கள் கேள்வி கேட்கவே கூடாது என அரசு நினைக்கிறது. அதுதான் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது”; என ஆதங்கப்பட்டவர், தொடர்ந்து சில விஷயங்களை முன்வைத்தார்.

“; சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழிகள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைப்பதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படும், வேளாண் பெருமக்கள் பாதிக்கப்படுவார்கள், மரங்கள் வெட்டப்படும், காடுகள் அழிக்கப்படும் ஆகிய பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு சட்டமன்றத்தில் விடையளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘ சாலைகள் மூலமே ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். இதனால் ஏற்படும் இழப்புகள் குறைவு. லாபங்கள் அதிகம்’ என்று விளக்கமளித்திருக்கிறார். ‘இந்தச் சாலை அமைக்கப்பட்டால் சேலத்தில் இருந்து சென்னையை மூன்று மணி நேரத்தில் இருந்து மூன்றரை மணி நேரத்தில் அடைந்து விடலாம். இது தொழில் வளர்ச்சிக்கு உதவும்’ என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். ’சாலைகள் ஒரு நாட்டின் இரத்தக் குழாய்கள்’ என்று மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகள் மிகவும் அவசியம் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. அகலமான, தரமான, விரைவாக செல்லக்கூடிய சாலைகள் வேண்டும் என்ற நோக்கத்துக்காக அரசு பணியாற்ற வேண்டும். சேலத்தில் இருந்து சென்னையை மூன்று மணி நேரத்தில் அடைவதற்கான விரைவுச் சாலை வேண்டும் என்பதும் சரியான கருத்துதான். ஆனால், இதற்குச் செய்ய வேண்டியது விவசாய நிலங்களை அழித்து, காடுகளை அழித்து, மரங்களை வெட்டி புதிய சாலைகள் அமைப்பது அல்ல. அரசுக்கு பல்வேறு இதர வாய்ப்புகள் இருக்கின்றன.

சேலம் டு வேலூர் சாலை!

இப்பொழுது சேலத்தில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையை சென்றடைய 5 மணி நேரமே ஆகிறது. இச்சாலையை விரைவுச் சாலையாக மாற்றினால் நிச்சயமாக பயண நேரத்தை குறைக்க முடியும். உலகம் முழுவதும் உள்ள அதிவிரைவுச் சாலைகள் (Express Way) அல்லது நெடுஞ்சாலைகள் (Motor way) அல்லது ஜெர்மனியின் ஆட்டோபான் (Autobahn) ஆகிய சாலைகளுடைய அமைப்பு வேறு. நம்முடைய தேசிய நெடுஞ்சாலைகளின் அமைப்பு வேறு. மேலே சொன்ன அதிவிரைவுச் சாலைகள் எவற்றிலும் எந்த இடத்திலும் சிக்னல்கள் கிடையாது. எந்த இடத்திலும் எதிரே வரும் வண்டிக்கு குறுக்காக வண்டியை செலுத்தி ஒரு திருப்பத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. சாலையிலே இணைய விரும்பும் வண்டிகள் செங்குத்தாக வந்து இணையாமல், இணைச் சாலையில் ஒரு குறிப்பிட்ட தொலைவு பயணித்து, அதிவிரைவுச் சாலையில் வண்டி செல்லுகிற வேகத்திற்கு இணையான வேகத்தை அடைந்த பிறகு இணைகிற அளவுக்குத் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, இந்தச் சாலைகள் அனைத்தும் விலங்குகளும் பாதசாரிகளும் குறுக்கே வந்துவிடாத வண்ணம் வேலியிடப்பட்டிருக்கின்றன. இந்திய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கும் பயணம் காலதாமதமாவதற்கும் முக்கிய காரணங்கள் இத்தகைய குறுக்கீடுகளும் சாலை ஓரங்களில் இருக்கின்ற கடைகளும் அந்தக் கடைகளில் உணவு அருந்தவும் பொருட்கள் வாங்கவும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதினால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலும்தான். இந்தக் குறைபாடுகளை நீக்கி, சேலம் – தருமபுரி – கிருஷ்ணகிரி – வேலூர் வழியாக செல்கின்ற நெடுஞ்சாலையை உலகம் முழுவதும் இருக்கின்ற அதிவிரைவுச் சாலைகள் போல அமைத்தாலே மூன்றரை மணி நேரத்தில் சென்னையை அடைந்துவிட முடியும். இதற்காக சிறிய அளவு சில இடங்களில் நிலங்கள் கையகப்படுத்த வேண்டிய அவசியம் வரலாம். ஆனால், நிச்சயம் பெரிய அளவில் நிலங்கள் கையகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.

ஆத்தூர் டு சென்னை!

இரண்டாவதாக, சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாகச் சென்று திருச்சி – சென்னை நெடுஞ்சாலையை அடையும் சாலை இருக்கிறது. இது கட்டணச் சாலை. தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகிற சாலை. ஆனால் இந்தச் சாலை மோசமான வடிவமைப்பு கொண்டதாக இருக்கிறது. சில இடங்களில் நான்கு வழிச் சாலையாக இருக்கிறது, திடீரென்று இரண்டு வழிச் சாலையாக மாறிவிடுகிறது. நான்கு வழிச்சாலையாக இருக்கும்போது இருபுறங்களில் செல்கிற வாகனத்தை பிரிக்கிற மீடியன் என்று சொல்லக்கூடிய அந்த நடு அமைப்பு இருக்கிறது. திடீரென்று எந்த அமைப்பும் இல்லாத இருவழிச் சாலையாக மாறி எதிரே வண்டி வருகிறது. நான்கு வழிச் சாலை இரண்டு வழிச் சாலையாக மாறுகிற இடங்களில் எந்தவித எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் இல்லை. அந்தச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் முறைகளும் அபாயகரமானதாக இருக்கிறது. அங்கே இருக்கிற பல கல்வி நிறுவன வாகனங்களும் தனியார் வாகனங்களும் அரசு வாகனங்களும்கூட திடீரென எதிரே தவறான வழியிலே வருவதைப் பார்க்கலாம். முறையான நான்கு வழிச் சாலையாக அமைக்காமல் ஒரு சாதாரண சாலைக்காக கட்டணம் வாங்குவது என்பதே அநியாயமானது.

அயோத்தியாபட்டினம் டு சென்னை!

புதியதாக பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, சேலத்தில் இருந்து வாழப்பாடி – ஆத்தூர் – கள்ளக்குறிச்சி வழியாக அமைக்கப்பட்டு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் அந்த நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து, முறையான அதிவிரைவுச் சாலையாக முன்னே குறிப்பிட்டது போல இருபுறமும் வேலிகள் அமைத்து பாதசாரிகளும் விலங்குகளும் குறுக்கே வராத வண்ணம் திட்டமிட்டு, சிக்னல்களும் சாலைப் பிரிவுகளும் இல்லாமல் அமைத்தால் அந்தச் சாலைகளின் பயண நேரமும் இப்பொழுது இருக்கிற ஐந்து அல்லது ஐந்தரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாகக் குறையும் வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது வாய்ப்பாக சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டிணம் – அரூர் – ஊத்தங்கரை – திருப்பத்தூர் வழியாகச் சென்று பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையினை இணைக்கும் சாலை இருக்கிறது. இந்தச் சாலையை விரிவாக்கி, தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்து, தேசிய நெடுஞ்சாலைகளுக்கான அம்சங்களோடு அமைத்தால் பயண நேரத்தை நிச்சயம் மூன்று மணி நேரமாகக் குறைக்க முடியும்.

கிடப்பில் கிடக்கும் திட்டங்கள்!

இவற்றை விட முக்கியமாக, உலகம் முழுவதும் பொருட்களை ஏற்றிச் செல்ல பெருமளவில் ரயில்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் ரயில் சேவை இன்னமும் பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டிய அவசியமும் வாய்ப்பும் இருக்கிறது. சென்னை – கோயம்புத்தூர், சென்னை – கன்னியாகுமாரி ரயில் பாதைகளில் ஏற்கனவே இருக்கிற இரண்டு வழிப்பாதைகளின் ஓரம் இன்னும் ஒரு பாதை, முழுக்க, முழுக்க சரக்கு வண்டிகள் பயணத்திற்காக ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் திட்டமும் நீண்ட நாட்களாக இருக்கிறது. சாலைப் பயணம் அதிக செலவாகக் கூடியது. ரயில் பயணத்தைவிட அதிகமான விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. கோயம்புத்தூர் – சென்னை, கன்னியாகுமாரி – சென்னை இடையே ஏற்கனவே இருக்கிற இரண்டு வழி ரயில் பாதைகளின் அருகில் தனியாக சரக்கு ரயில் போக்குவரத்துக்கான ஒரு சரக்குப் பாதை அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் குறைந்த செலவில் அதிக அளவில் பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். ரயில் பயணம் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது, செலவு குறைவானது, விபத்து குறைவானது’ என்றார் விரிவாக.

No views yet

Humid morning in the national capital

News Tamilnadu 13 hours ago

The weatherman has predicted clear skies throughout the day with the maximum temperature likely to settle around 39 degrees Celsius.

No views yet

இரண்டு கட்சிகளுக்கு குறி வைக்கும் திவாகரன்!

News Tamilnadu 13 hours ago

சமீபத்தில் புதிய கட்சியைத் தொடங்கிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் பிஸியாக இருந்துவருகிறார்.

கடந்த 10-ம் தேதி சசிகலாவின் சகோதரர் திவாகரன், `அண்ணா திராவிடர் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சிக்கான கொடியையும் அறிமுகம் செய்தார். அந்த நிகழ்ச்சியில், விரைவில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது, திவாகரனின் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கட்சிப்பணியில் ஈடுபட திவாகரனுக்கு நெருக்கமான மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்னை முதல் குமரி வரை நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசித்துவருகின்றனர். மாவட்டச் செயலாளர்களுக்கான நேர்காணல் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டு பட்டியலும் தயாராக உள்ளது. இதனால் விரைவில் மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத் திவாகரனுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “திவாகரனின் புதிய கட்சியால் அ.தி.மு.க-வுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். ஆனால், அது தவறு. எங்களின் வருகையால் அ.தி.மு.க-விலும் தினகரன் தரப்பிலும் கடும் சலசலப்பு ஏற்படும்.

அ.தி.மு.க-வில் உள்ள பலர், திவாகரன் மூலம்தான் இன்று பதவியில் உள்ளனர். இதனால், அவர்களில் பலர் திவாகரனுக்குத் துரோகம் செய்துவிட்டனர். இதனால், அண்ணா திராவிடர் கழகத்தில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது. மேலும், தினகரன் தரப்பினருக்கும் இந்தக் கட்சியில் இடமில்லை. அதே நேரத்தில் தே.மு.தி.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருக்கும் முக்கிய பிரமுகர்கள், எங்களின் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படும்.

இதுதவிர சினிமா துறையிலிருந்தும் பலர் இந்தக் கட்சியில் சேர உள்ளனர். அவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளன. நிர்வாகிகள் நியமனத்துக்குப் பிறகு தமிழகம் முழுவதும் திவாகரன், இந்த மாத இறுதியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலைகளும் நடந்துவருகின்றன. இந்தக் கட்சியில் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றும் காத்திருக்கிறது. கட்சியை வலுப்படுத்த அவர்கள் செய்யும் முயற்சி அடிப்படையில் இந்தப் பரிசு கொடுக்கப்படும்”; என்றனர்.

இதுகுறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “மன்னார்குடி குடும்பத்தையே அ.தி.மு.க-விலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டோம். சிறையில் சசிகலா இருக்கிறார் என்ற கவலைகூட திவாகரனுக்கும் தினகரனுக்கும் இல்லை. தினகரனுக்கும் திவாகரனுக்கும் நடந்த மோதலில் சசிகலா மனவேதனையிலிருக்கிறார். இதனால்தான் தன்னுடைய பெயரைக்கூட திவாகரன் பயன்படுத்தக் கூடாது என்று சசிகலா வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்தளவுக்கு மன்னார்குடி குடும்பத்தில் முட்டல், மோதல் இருந்துவருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.க.வில் மாற்றம் ஏற்படும் என்று சசிகலா தரப்பினர் கருதினர். ஆனால், அவர்களுக்கு அது ஏமாற்றத்தையே கொடுத்தது. தினகரனை நம்பி எம்.எல்.ஏ-க்கள் பதவிகளை இழந்த 18 பேரில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க-வில் இணைய விருப்பம் தெரிவித்து தூதுவிட்டுள்ளனர். விரைவில் 10-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எம்.எல்.ஏ தகுதி நீக்க தீர்ப்புக்கு முன் நல்ல செய்தி வரும்”; என்றார்.

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு முன்பிலிருந்தே தினகரனின் கூடாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. தீர்ப்புக்குப் பிறகு, தினகரனுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் அதிரடி முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்தச் சமயத்தில் திவாகரனின் புதிய கட்சி விவகாரமும் தினகரன் தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. தினகரனிடமிருந்த தங்க தமிழ்ச்செல்வன், வழக்கை வாபஸ் பெற உள்ளதாகவும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் கூறிவருகிறார். இது, தகுதி இழந்த மற்ற எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் கவனித்த தினகரன், புதிய ரூட்டில் தன்னுடைய அரசியல் பயணத்துக்கு அச்சாரமிட்டுவருகிறார்.

தினகரன், திவாகரனின் மோதலை இதுவரை வேடிக்கை பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு இனி சில மாதங்களுக்கு ஆட்சிக்கும் கட்சிக்கும் சிக்கல் இல்லை என்ற நிம்மதியில் உள்ளனர். அதே நேரத்தில் தகுதி இழந்த எம்.எல்.ஏ-க்களை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைக்க தூது படலத்தை தீவிரப்படுத்தியுள்ளது அ.தி.மு.க கட்சித் தலைமை. அதற்கு ஓ.கே சொன்னவர்களிடம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

No views yet

கூட்டணியை முறித்தது பா.ஜ.க! இரண்டு ஆண்டுக்குள் முடிவுக்கு வந்தது மெஹபூபா ஆட்சி!

News Tamilnadu 13 hours ago

காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அம்மாநில பா.ஜ.க பொறுப்பாளர் ராம் மாதவ் அறிவித்துள்ளார். இதனால், காஷ்மீரில் நடந்து வரும் மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்து வெற்றிபெற்றது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முஃப்தி முகமது சயீத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மரணம் அடைந்ததை அடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு மெஹபூபா முஃப்தி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மெஹபூபா முஃப்தி அரசுக்கு, அளித்த ஆதரவைத் திரும்ப பெறுவதாகப் பா.ஜ.க இன்று திடீரென அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காஷ்மீர் மாநிலப் பா.ஜ.க பொறுப்பாளர் ராம் மாதவ், `காஷ்மீரில் அமைதியை நிலை நாட்டவே, மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால், காஷ்மீரில் அண்மைக்காலமாகப் பயங்கரவாதம், பத்திரிகையாளர் சுடப்பட்டது உள்ளிட்ட பல அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால், இரு கட்சிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் ஜனநாயகக் கட்சியுடான கூட்டணியைப் பா.ஜ.க வாபஸ் பெறுகிறது’ என்று கூறினார்.

87 உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28, பா.ஜ.க-வுக்கு 25 மற்றும் தேசிய மாநாடு கட்சிக்கு 15 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 44 எம்.எல்.ஏ-க்களில் ஆதரவு தேவை. பா.ஜ.க அளித்த ஆதரவைத் திரும்ப பெற்றதையடுத்து, காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சியுடன் மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆட்சியை அமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதனிடையே, முதல்வர் பதவியை மெஹபூபா முஃப்தி ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

No views yet

`எதிர்காலம் இருளும் முன்பாக ஏதாவது செய்வோம்’ – 8 வழிச்சாலை பற்றி சுப.உதயகுமாரன்!

News Tamilnadu 13 hours ago

சேலம் மக்களின் எதிர்காலம் இருள்வதற்கு முன்பாக ஏதாவது செய்வோம் என்று 8 வழிச் சாலை குறித்து சுப.உதயகுமாரன் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் அகற்றி அழித்து விட்டு, சென்னை-சேலம் இடையே 8 வழிச் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகிறார்கள். இதற்கு, பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரான சுப.உதயகுமாரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம்-சென்னை எட்டு வழிச் சாலைக்கு எதிராகப் பேசினாலே கைது செய்வோம், சிறை வைப்போம் எனும் எடப்பாடி அரசின் பாசிச அணுகுமுறையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதே பாசிச அணுகுமுறையைத்தான் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குமரி சரக்குப் பெட்டகத் துறைமுகத் திட்டத்தில் கடைபிடிக்கிறார்.

கார்ப்பரேட் வளர்ச்சித் திட்டங்கள் இனி இப்படித்தான் அமல்படுத்தப்படும். அடுத்த தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி தலைமையிலேயே ஆட்சி அமைந்தால், நிலைமை இன்னும் மிக மோசமாகும். ரூ.10,000 கோடி சாலை, ரூ.20,000 கோடி துறைமுகம் என்றால் சாதாரண விசயங்களா என்ன? பத்து விழுக்காடு அடித்தால்கூட, கற்பனை செய்ய முடியாத காசு கிடைக்கிறதே. அதனால் அரசியல்வாதிகளே, அதிகாரிகளே, பெரு நிறுவனங்களே, உங்களுக்கு வேண்டும் மட்டும் எங்கள் பணத்தைத் திருடிக் கொள்ளுங்கள். ஆனால், எங்கள் நிலத்தை, நீரை, கடலை, காற்றை, மலைகளை, மரங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் பெருவாழ்வு வாழ, எங்கள் வாழ்வைச் சிதறடிக்காதீர்கள்.

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், இயக்கத் தோழர்களும் சேலம் போவோம். அங்கே என்ன நடக்கிறது? என்று உள்ளூர் அதிகாரிகளிடம் கேட்போம். மாவட்ட ஆட்சித் தலைவரை மாற்றச் சொல்வோம். சிலர் கொள்ளை அடிக்க எங்கள் மக்கள் அழிவதா? என்று கேட்போம். எதிர்காலம் முற்றிலும் இருளும் முன்னால், ஏதாவது செய்வோம்’’ என சுப.உதயகுமாரன் தெரிவித்துள்ளார்.

No views yet

`அளவின்றி விளம்பரம் செய்ய வேண்டாம்’ – தொண்டர்களுக்குக் கட்டுப்பாடு விதித்த தி.மு.க!

News Tamilnadu 13 hours ago

கட்சி நிகழ்ச்சிகளுக்கு அளவின்றி விளம்பரம் செய்ய வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு தி.மு.க தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈகா தியேட்டர் – கோயம்பேடு சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும் சேதப்படுத்தியும் கட்- அவுட்களும் கொடிக் கம்பங்களும் நடப்பட்டன. இதைப் புகைப்படமாக எடுத்து அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. போதாக்குறைக்கு, “நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது” எனப் பதிவிட்டது. இது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகப் பரவ தி.மு.க-வுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன.

உடனடியாக இதைப்பார்த்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் இந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததோடு, சேதங்களை உடனடியாகச் சரி செய்ய உத்தரவிட்டார். அதன்படி தி.மு.க தொண்டர்கள் அதைச் சரி செய்தனர். சரி செய்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ஜெ.அன்பழகன், “சேதமடைந்த இடங்களை எங்கள் குழுவினர் வெற்றிகரமாகச் சரி செய்துவிட்டனர். எந்த ஒரு பகுதியும் சரிசெய்யப்படாமல் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும். இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற தவறு இனி நடைபெறாது என்பதுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.

இதற்கிடையே, விளம்பரங்களில் செய்வதில் தொண்டர்களுக்குக் கட்டுப்பாடு விதித்து திமுக தலைமை கழகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தி.மு.க பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்குப் பேனர்கள், கட்அவுட்கள் போன்ற விளம்பரங்கள் செய்து பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு செய்யக் கூடாது என்றும், பொதுச் சொத்துகளுக்குச் சேதாரம் ஏற்படுத்தக் கூடாதென்றும் கழகச் செயல்தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேரத்திலேயே அறிவுறுத்தி இருந்தார். இதத் தொண்டர்கள் கடைப்பிடித்தாலும், ஒரு சிலர் ஆர்வக்கோளாறின் காரணமாக இதனை கடைப்பிடிக்கவில்லை.

இது அண்ணாநகர் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளிவந்த செய்திகள் வாயிலாகத் தெரிய வருகிறது. இதை அறிந்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை அழைத்து, பாதிக்கப்பட்ட நடைபாதைகளை உடனடியாகப் பழுது பார்த்து முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவந்து சரிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அவர்களும் அப்பணிகளைச் செய்து முடித்து உள்ளனர். முன்பு கூறியவாறே நிகழ்ச்சிகள் குறித்து அளவின்றி விளம்பரங்கள் செய்ய வேண்டாம். ஓரிரு இடங்களில் விளம்பரம் செய்தாலே போதுமானது”; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 total views, 1 today

தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடி தமிழ் வழியில் நடந்த குடமுழுக்கு!

News Tamilnadu 13 hours ago

கரூர் மாவட்டம், அம்மன் கோயில் ஒன்றில் முழுக்க முழுக்க தேவாரம், திருவாசகம் பாடி தமிழ் முறைப்படி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இந்தக் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருளைப் பெற்றுச் சென்றனர்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது திருமக்கூடலூர். இந்தக் கிராமத்தில் உள்ள பகவதி அம்மன் கோயிலில்தான் தேவார, திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டு, தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்யப்பட்டது. கோவை அருட்பணி மன்றத்தினர் மற்றும் கரூர் உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியர் திருக்கோயில் சிவ.செந்தில் ஆகியோர் சேர்ந்து இந்தப் பகவதி அம்மன் கோயிலில் தமிழ்முறைப்படி குடமுழுக்கு விழா நடத்தினர். இந்தக் குடமுழுக்கு விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்று சென்றனர்.இந்தக் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட தமிழ் ராஜேந்திரன் என்பவரிடம் பேசினோம். “;இந்தத் திருமக்கூடலூர் கிராம மக்கள் பகவதி அம்மன் கோயிலில் முழுக்க முழுக்க தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடி தமிழ்முறைப்படி குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறார்கள். இந்தக் கிராம மக்கள் தமிழ்மீது அலாதி பற்றுள்ளவர்கள். ஏற்கெனவே இந்தக் கிராமத்தில் இருக்கும் மணிமுத்தீஸ்வரர் கோயிலில் 2002-ம் ஆண்டு தமிழக அறநிலையத்துறை எதிர்ப்பை மீறி, தமிழில் குடமுழுக்கு செய்து சாதித்தனர். அப்போது குடமுழுக்கு கமிட்டியில் இருந்த சங்கராச்சாரியார் மணிமுத்தீஸ்வரர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்.
இரண்டு சிவனடியார்கள், `தமிழில் குடமுழுக்கு செய்ய எதிர்ப்பு தெரிவித்தால், நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம்’ன்னு போராட்டம் நடத்திய பிறகே, தமிழில் குடமுழுக்கு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல், இந்தமுறையும் மற்றொரும் கோயிலான பகவதி கோயிலைப் புனரமைத்து, தமிழில் தேவாரம், திருவாசகப் பாடல்களை மனமுருகப் பாடி தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்து அசத்தியிருக்கிறார்கள்”; என்றார்.

No views yet

8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த வளர்மதி திடீர் கைது!

News Tamilnadu 13 hours ago

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சூழல் செயற்பாட்டாளர் வளர்மதியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணி நேற்று சேலம் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. மஞ்சவாடி கனவாய், அடிமலைப்புதூர், சுக்கம்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வீராணம் போன்ற பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள்.

அடிமலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 11 பேர் தங்கள் நிலங்களில் படுத்துக்கொண்டு `8 வழிச் சாலைக்கு நிலம் கொடுக்க முடியாது’ என்று நில அளவை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். காவல்துறையினர் குவிப்பையடுத்து விவசாயிகள் யாரிடமும் பேசுவதற்கே அச்சப்பட்டதையடுத்து 8 வழிச் சாலைக்கான எல்லைக் கல் விரைந்து போடப்பட்டது.

இந்த நிலையில் ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்துக்கு சூழல் செயற்பாட்டாளர் வளர்மதி இன்று வந்தார். அப்போது, கிராம மக்களைச் சந்தித்து பேசிய அவர், பசுமைச் சாலை அமைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறினார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் வளர்மதியைக் கைது செய்ய முயன்றனர். அப்போது, அவரைக் கைது செய்யவிடாமல் பொதுமக்கள் தடுத்தனர். பின்னர், பொதுமக்களிடமிருந்து வளர்மதியைப் பிடித்து இழுத்த காவல்துறையினர், அவரைக் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அவரைக் காவல்துறையினர் எங்கு கொண்டு சென்றனர் என்று தெரியவில்லை.

No views yet

'இது காலத்தின் கட்டாயம்'- 18 எம்.எல்.ஏ-க்கள் குறித்த கேள்விக்கு அதிர்ந்த ஜெயக்குமார்

News Tamilnadu 13 hours ago

“தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க-வுக்கு மீண்டும் வருவது காலத்தின் கட்டாயம்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்தான். எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் பொறுப்பும் கடமையும் ஆணையத்துக்கு உள்ளது. நிச்சயம் காவிரி மேலாண்மை ஆணையம் நல்லதே செய்யும் என்னும் நம்பிக்கை உள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமரைச் சந்தித்தது நேரத்தை வீணடிக்கும் செயல் மட்டுமே. அதனால் தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் எந்த நல்லதும் நடக்கப்போவது இல்லை. குமாரசாமி, நாராயணசாமி யாராக இருந்தாலும் சரி, அவர்களால் எதுவும் செயல்படுத்த முடியாது. அனைவருக்கும் பிரதான சாமியாக இருப்பது காவிரி மேலாண்மை ஆணையம்தான். எனவே, அந்தச் சாமி மூலம் காவிரி பிரச்னையில் விரைவில் தீர்வு கிடைக்கும்.

நேற்று முதல்வர் கூறியிருந்தார் அ.தி.மு.க-வில் இருந்து திரும்பிச் சென்றவர்கள் அனைவரும் மீண்டும் கழகத்துக்கு வர வேண்டும் என்று, அதைத்தான் தற்போது நானும் சொல்கிறேன். ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு அ.தி.மு.க-வில் இணைந்து தற்போது பிரிந்துள்ளவர்கள் அனைவரும் மீண்டும் இங்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்” எனக் கூறினார்.

மேலும், 18 எம்.எல்.ஏ-க்களை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ”அதை இங்கு நான் கட்டாயம் சொல்லியே ஆக வேண்டுமா? என எதிர்க் கேள்வி எழுப்பினார். பின்னர் எந்த விஷயங்களை எப்போது கூற வேண்டுமோ அப்போது நிச்சயம் தெரிவிக்கப்படும்” என பதிலளித்தார்.

No views yet

சிகிச்சையிலிருந்த 4 பேர் அடுத்தடுத்து பலியான சோகம்! சிவகாசியில் அதிர்ச்சி

News Tamilnadu 13 hours ago

சிவகாசி அருகே கடந்த 15-ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த நான்கு தொழிலாளர்கள், சிகிச்சை பலனளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக பலியான சம்பவம் அப்பகுதி மக்களை துயரமடையச் செய்துள்ளது.
சிவகாசி வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆபத்து நிறைந்த இந்தப் பணியில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பணியாற்றி வருகிறார்கள். அவ்வப்போது வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. விபத்து நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டவுடன் பட்டாசு ஆலைகளில் கடுமை காட்டும் அதிகாரிகள், அதன் பின்பு அமைதியாகி விடுகிறார்கள். பட்டாசு ஆலை முதலாளிகளும், விபத்து நடந்தவுடன் பலியானவர்களின் குடும்பத்துக்கு சிறு இழப்பீடை கொடுத்து அமைதிப்படுத்திவிட்டு, மீண்டும் தங்கள் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கி விடுகிறார்கள்.

கடந்த 15-ம் தேதி சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டியில் கனகபிரபு என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென்று ஏற்பட்ட வெடி விபத்தில் ராமசாமி, மாரிப்பாண்டி, அழகுபாண்டி, முருகேசன் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 4 பேரும் சிவகாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 95 சதவிகித தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் முருகேசனும், அவரைத் தொடர்ந்து ராமசாமியும் உயிரிழந்தனர். நேற்று மாலை அழகுபாண்டியும், இரவு 11 மணிக்கு மாரிப்பாண்டியும் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தனர். நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்த சம்பவத்தால் எம்.புதுப்பட்டி பகுதி சோகமயமாக உள்ளது.

No views yet

'இதைப் பின்பற்றாவிட்டால் தண்டனை'- அதிகாரிகளைப் பதறவைத்த அரசின் அறிக்கை

News Tamilnadu 13 hours ago

எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என ஹரியானா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா அரசு சார்பில் அம்மாநிலத் தலைமைச் செயலாளர் அலுவலகத்திலிருந்து ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘மாநிலத்தில் உள்ள எம்.பி-க்களோ அல்லது எம்.எல்.ஏ-க்களோ அரசு அலுவலகங்களுக்கு வரும்போது அரசு அதிகாரிகள் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் வைத்து மரியாதை செலுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் மூலமும் மெயில் மூலமும் அனுப்பப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றத் தவறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, பொது நிகழ்ச்சிகளில் எம்.பி-க்கள் கலந்துகொள்ளும்போது அங்கும் அதிகாரிகள் அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் எனவும் அனைத்து முக்கியமான நிகழ்ச்சிகளுக்கும் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் மற்றும் நிகழ்ச்சி குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற உத்தரவு கடந்த வருடம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No views yet

“நாங்கள் ஏழைகள்… எனவே, ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை" – அமைச்சர் தங்கமணி

News Tamilnadu 13 hours ago

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம், விமானநிலையம் அருகில் உள்ள வயர்லெஸ் சாலையில் நேற்று நடந்தது. திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.பி-யுமான ப. குமார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பி. தங்கமணி, வெல்லமண்டி நடராஜன், எஸ். வளர்மதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கே.கே. பாலசுப்ரமணியன், நல்லுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, “காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்குத் துரோகம் செய்தது தி.மு.க-தான். காவிரி நடுவர் மன்றம் என்ற வார்த்தையை முதன்முதலில் அறிவித்தது எம்.ஜி.ஆர். மேலும், நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது அ.தி.மு.க.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் தற்போது அமைக்கப்பட்டுவிட்டது. அந்தக் குழுவின் அதிகாரம் டெல்லியில் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நிறைவேறியுள்ளது. அந்த ஆணையத்திற்கான தமிழக உறுப்பினர்களையும் நியமித்துள்ளோம். கர்நாடக அரசின் சார்பில் உறுப்பினர்களை நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மொத்தத்தில் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது அ.தி.மு.க-தான்.

மக்களை திசை திருப்புவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, இப்போது நடைபயணம் மேற்கொண்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவருடைய கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போதும், மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும் காவிரி பிரச்னைக்காக எந்தக் குரலும் கொடுக்கவில்லை.

அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விடும் என ஸ்டாலின் கூறுகிறார். அப்படி, அவர் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். தமிழக மக்களை பொறுத்தவரை, மாநிலத்தில் தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று மக்கள் கூறி வருகிறார்கள்.

ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்தவர்களை மக்கள் ஏற்கமாட்டார்கள். டி.டி.வி. தினகரனை நம்பிச் சென்றவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். அடுத்து வருகிற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் ஜெயலலிதாவைச் சுற்றி இருந்துகொண்டு அனைத்தையும் சுருட்டிக்கொண்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைச் சிக்க வைத்துவிட்டார்கள். அதுவே அவரின் உயிருக்கு ஆபத்தாகிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எங்களைச் சந்திக்க விடவில்லை. பலமுறை கேட்டும் உள்ளே அனுமதிக்கவில்லை. எங்களை உள்ளேயே விடவில்லை சரி.. நாங்கள் ஏழைகள். ஆனால், பக்கத்து மாநில முதல்வர்கள், தலைவர்கள் எனப் பலரும் வந்தார்களே அவர்களை அனுமதித்திருக்கலாம். அப்படி அனுமதித்திருந்தால், ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை தெரிந்திருக்கும். அவரின் உடலை இன்னும் ஒருநாள் மக்கள் பார்வைக்கு வைத்திருக்கலாம். எல்லாம் மர்மமாக உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக டி.டி.வி. தினகரன் இருந்தபோது, காவிரி உரிமை பற்றி ஒருவார்த்தை பேசியிருப்பாரா, இல்லை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இங்கேயும் உருப்படியாக எதுவும் பேசுவதில்லை. டெல்டா மாவட்டத்தில் பிறந்து தமிழகத்துக்குத் துரோகம் விளைவித்தவர் அவர். ஜெயலலிதாவால் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த தினகரன், தற்போது `நான்தான் அ.தி.மு.க’ என்று சொல்வதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், இந்த இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டாலும் சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டு, இரு அணிகளும் மீண்டும் ஒன்றிணைந்து, ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

No views yet

`சி.டி.இ.டி தேர்வு விண்ணப்பப் பதிவு ஒத்திவைப்பு' – சி.பி.எஸ்.இ திடீர் அறிவிப்பு

News Tamilnadu 13 hours ago

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஒத்திவைக்கப்பட்டதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் (சி.டி.இ.டி) தேர்ச்சிபெற வேண்டும். சி.டி.இ.டி தேர்வில் மொழித் தேர்விலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு வரை தமிழ் மொழி உட்பட 20 மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்தி, சம்ஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டும் தேர்வு எழுத முடியும் என்று செய்திகள் வெளியாகின. இந்தத் தகவல் சர்ச்சையைக் கிளப்பியது.

இதையடுத்து, நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், `சி.டி.இ.டி தேர்வு குறித்து வெளியான தகவல் உண்மையில்லை. தமிழ் உட்பட 20 மொழிகளில் தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்’.

இந்நிலையில், சி.டி.இ.டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு 22-ம் தேதியில் தொடங்க இருந்த நிலையில், விண்ணப்பப் பதிவு ஒத்திவைக்கப்பட்டதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. அதில், `நிர்வாக காரணங்களுக்காக சி.டி.இ.டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பதிவுக்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.

No views yet

சேலம் – சென்னை பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வளர்மதி திடீர் கைது

News Tamilnadu 13 hours ago

சேலம் – சென்னை பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களுக்கு ஆதரவாகப் பேசியதாக, பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை போலீஸார் கைது செய்தனர்.

No views yet

பசுமைவழிச் சாலை விவகாரம்; தமிழக அரசு அடக்குமுறையைக் கையாள்கிறது: முத்தரசன் கண்டனம்

News Tamilnadu 13 hours ago

சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறையைக் கையாள்வது கடும் கண்டனத்திற்குரியது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

No views yet

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கு; குரல் மாதிரி பரிசோதனைக்கு நிர்மலா தேவி பதிலளிக்க உத்தரவு

News Tamilnadu 14 hours ago

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதி கோரிய வழக்கில் நிர்மலா தேவி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

No views yet

பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது: திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

News Tamilnadu 14 hours ago

திமுக நிர்வாகிகள் பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளில் இனி பிளக்ஸ் பேனர், கட் அவுட், விளம்பரங்கள் வைத்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்யவே கூடாது என ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No views yet

வன்முறை எண்ணத்தில் மாணவர்கள்; கவுன்சிலிங் தர ஆலோசனை: இணை ஆணையர் அன்பு பேட்டி

News Tamilnadu 15 hours ago

மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்க அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படும், பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கப்படும் என இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

No views yet

நிர்மலா தேவி வழக்கில் ஆராய்ச்சி மாணவர் ஜாமீன் மனு தள்ளுபடி

News Tamilnadu 15 hours ago

தனியார் கல்லூரி பேராசிரியை மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கில் ஆராய்ச்சி மாணவரின் ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

No views yet

காவிரி விவகாரத்தில் புதிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார் குமாரசாமி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

News Tamilnadu 16 hours ago

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தங்களின் பிரதிநிதியை நியமிப்பதில் காலம் தாழ்த்திவிட்டு, காவிரி வரைவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் வைத்து நிறைவேற்ற வேண்டுமென்று கர்நாடக முதலவர் குமாரசாமி வலியுறுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

No views yet

Rahul Gandhi turns 48; PM Narendra Modi prays for his `long and healthy life`

News Tamilnadu 17 hours ago

PM Modi took to Twitter and wished Rahul Gandhi a ‘long and healthy life’.

No views yet

BSEB Bihar board Class 10 results 2018: Official websites to check Bihar Matric 2018 results

News Tamilnadu 17 hours ago

The Bihar School Examination Board (BSEB) is all set to announce BSEB Bihar board Class 10 Matric results or BSEB Bihar board Class 10 results 2018 tomorrow, June 20, 2018, on its Bihar Board’s official website – biharboard.ac.in. As per sources, the results will be released after 10 am. Below, we present a list of websites where one can view their Bihar Board Class 10 Matric 2018 results:

No views yet

Indian Air Force helicopter drops 15000 litres of water to put out fire on burning ship

News Tamilnadu 17 hours ago

The rescue operation was carried out in the Bay of Bengal, off the coast of the Sunderbans.

No views yet

`Anti-Hindutva` rationalists, writers get tighter security cover over threats

News Tamilnadu 17 hours ago

The SIT had on Friday arrested Parashuram Waghmare, the last of the six suspects arrested in connection with the journalist Gauri Lankesh murder.

No views yet

2,000 Indians denied work visa by Maldives; Govt monitoring situation

News Tamilnadu 17 hours ago

MEA is believed to be monitoring the situation in the Maldives and collecting data about Indians who have lost their jobs in the Island nation.  

No views yet

Wife has beard and manly voice: Husband seeks divorce

News Tamilnadu 17 hours ago

An Ahmedabad-based man has sought divorce from his wife on the grounds that she has facial hair that looks like beard and a manly voice. 

No views yet

'எங்கள கொன்னுட்டு நிலத்தை எடுத்திட்டுப்போங்க!' – கொந்தளிக்கும் விவசாயி ராமக்கா

News Tamilnadu 17 hours ago

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணி நேற்று சேலம் மாவட்டத்தில் தொடங்கியது. மஞ்சவாடி கனவாய், அடிமலைப்புதூர், சுக்கம்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வீராணம் போன்ற பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள்.

அடிமலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 11 பேர் தங்கள் நிலங்களில் படுத்துக்கொண்டு `8 வழி சாலைக்கு நிலம் கொடுக்க முடியாது’ என்று நில அளவை செய்ய எதிர்ப்பு தெரிவித்தையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். காவல்துறையினர் குவிப்பையடுத்து விவசாயிகள் யாரிடமும் பேசுவதற்கே அச்சப்பட்டதையடுத்து 8 வழிச் சாலைக்கான எல்லைக் கல் விரைந்து போடப்பட்டது.

இதுபற்றி ஆச்சாங்குட்டப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமார், “அடுத்த மாதம் 10-ம் தேதி அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள அன்னை கஸ்தூரிபாய் மண்டபத்தில் ஆட்சேபனை கூட்டம் நடத்தப்போவதாக தாசில்தார் தெரிவித்தார். இதற்கிடையில் திடுதிப்பென்று எங்க விளை நிலத்துக்குள் புகுந்து கல் நடுகிறார்கள். மீறிக் கேட்டால் மிரட்டுறாங்க, அடிக்கிறாங்க. கைது செஞ்சுட்டுப் போறாங்க. இது என்ன ஜனநாயக நாடா? இழப்பீடு தொகை கொடுத்த பிறகு நிலம் அரசுக்குச் சொந்தம். அதுவரை எங்களுக்குச் சொந்தம். ஆனால், எங்களிடம் கேட்காமலேயே கல்லைப் போடுவது எந்த விதத்தில் நியாயம்? இதைக் கேட்டால் கைது செய்கிறார்கள். அப்பா, அம்மா, ஆடு, மாடுகளோடு எங்களைக் காலி செய்கிறார்கள். அந்தப் பாவம் ஆட்சியாளர்களை சும்மா விடாது” என்றார்.

இதுபற்றி ஆச்சாங்குட்டப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமக்கா, “எல்லா நிலமும் போயிடுச்சு. வாய் திறந்து அழுவதற்குகூட இந்த நாட்டில் உரிமை இல்லை. ரோட்டில் செயினை அறுத்துட்டுப் போகின்ற கொள்ளைக்காரர்களைபோல அரசாங்கம் எங்கள் வீடு, காடுகளை கொள்ளை அடிச்சுட்டுப் போறாங்க. போலீஸ்காரர்களைக் காட்டி எங்களை அச்சப்பட வைக்கிறார்கள். இந்த மாடு, கன்றுக்குட்டியை எல்லாம் பிடிச்சுட்டு எங்க போக முடியும். கோடைக்காலத்தில் விலைக்கு தண்ணீர் ஊற்றி இந்த தென்னை மரங்களை வளர்த்தோம். இப்ப அடியோட வெட்டப் போகிறோம் என்றால் யாருக்கு கோபம் வராது. எங்களுக்கு மருந்து வாங்கி கொன்றுவிட்டு இந்த நிலத்தை எடுத்துட்டு போகலாம்”என்றார்.

No views yet

கொள்ளையர்கள் செய்த தந்திர வேலை – அதிர்ச்சியில் மேலாளர்

News Tamilnadu 17 hours ago

சென்னையில் கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் விலை உயர்ந்த பொருள்கள் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த டிவி, ஜன்னல், அலமாரிகள் ஆகியவற்றின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம், ஜகஜீவன்ராம்நகர், முதலாவது அவென்யூவில் வாடகை வீட்டில் குடியிருப்பவர் பிரபாகர். இவர், பெருங்குடியில் உள்ள கார் கம்பெனியில் மேலாளராகப் பணியாற்றுகிறார். இவரின் மனைவி கல்பனா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். கடந்த வெள்ளிக்கிழமை, குடும்பத்துடன் பிரபாகர், கொடைக்கானலுக்குச் சென்றார். இன்று அதிகாலை 4 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது எல்.இ.டி- டிவி, ஜன்னல், அலமாரிகள் ஆகியவற்றின் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன. மேலும் பூஜை அறையிலிருந்த வெள்ளிப் பொருள்கள், 1000 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளைப் போயிருந்தன. இதையடுத்து, பிரபாகர் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் இன்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். கொள்ளையர்களின் கைரேகைகளையும் நிபுணர்கள் பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “பிரபாகரின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். வீட்டில் விலை உயர்ந்த பொருள்கள் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால்தான் டி.வி மற்றும் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். பிறகு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் தங்களை அடையாளம் கண்டுப்பிடித்துவிடக்கூடாது என்பதற்காக அதன் இணைப்பைத் துண்டித்துள்ளனர். இதனால், கொள்ளையர்கள் யார் என்று கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைரேகை மூலம் கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், அந்தத் தெருவில் உள்ள மற்ற சிசிடிவி. கேமராவில் கொள்ளையர்களின் முகங்கள் பதிவாகியுள்ளதா என்றும் விசாரித்துவருகிறோம்”; என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“ பிரபல சிலைக்கடத்தல் மன்னன் ஒருவரின் வீட்டில்தான் பிரபாகர் மாதம் 36,000 ரூபாய் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். வசதியாக வாழும் அவர், வீட்டில் நகை, பணம் என எதையும் வைத்திருப்பதில்லை. நகைகளை வங்கி லாக்கரில் வைத்துள்ளார். இதனால்தான் அவைகள் தப்பிவிட்டன”; என்றார்.

No views yet

பசுமைச் சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அடுத்தடுத்து கைது! பதற்றத்தில் முதல்வர் மாவட்டம்

News Tamilnadu 17 hours ago

சேலம் விமான நிலைய விரிவாக்கம் பணிக்காகவும், சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்காகவும் சேலம் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அதற்காக பல விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களை அடுத்தடுத்து சேலம் காவல்துறையினர் கைது செய்து வருவதால் சேலத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.
சேலத்தில் பியூஸ் மனுஷ் பராமரித்து வரும் குமரகிரி ஏரி, மூக்கனேரியைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்திருந்த நடிகர் மன்சூர் அலிகான், “சேலத்தில் உள்ள கனிம வளங்களைக் கொள்ளையடித்துச் செல்லும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே விமான நிலைய விரிவாக்கமும், 8 வழிச் சாலையும் போடுகிறார்கள். பசுமையை அழித்து பசுமைச் சாலை போடுகிறார்கள். 8 வழி சாலை வந்தால் 8 பேரை வெட்டுவேன்” என்று கூறினார். அவரை சேலம் காவல்துறையினர் நேற்று முன்தினம் தீவட்டிப்பட்டியில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

நேற்று இரவு 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்காக நில அளவை செய்யப்பட்டது. தங்கள் நிலங்களில் படுத்துக்கொண்டு நில அளவை செய்ய அனுமதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் 11 பேர் கைது செய்து வீராணம் காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்து மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். நில அளவீடு செய்யும்போது காவல்துறை குவிக்கப்பட்டதால் பெரும் பதற்ற நிலை உருவானது. விமான நிலைய விரிவாக்கத்துக்காகவும், 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு எதிராகவும் மக்களை தூண்டிவிட்டு போராட்டம் செய்ய சதித்திட்டம் தீட்டி வருவதாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் இரவு ஓமலூர் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் முதல்வர் மாவட்டமான சேலத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

No views yet

சில இயங்குதளங்களில் வாட்ஸ்அப் இனி வராது.. உங்கள் மொபைல் இந்தப் பட்டியலில் இருக்கிறதா?

News Tamilnadu 17 hours ago

வாட்ஸ்அப் நிறுவனம் சில இயங்குதளங்களின் பட்டியலை வெளியிட்டு இந்த 2018-ம் ஆண்டின் இறுதியோடு அந்த இயங்குதளங்களில் தன் சேவைகளை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது . அந்தப் பட்டியலில் உள்ள ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் இயங்குதளங்களால்தான் இனி வெளியிடப் போகும் அப்டேட்களை சப்போர்ட் செய்ய முடியாமல் உள்ளது என்ற காரணத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். அந்தப் பட்டியலில் உள்ள சில இயங்குதளங்கள் தற்போதே வாட்ஸ்அப்பின் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டு விட்டன என கூறப்படுகிறது . ஒரு வேளை நீங்கள் ஆன்ட்ராய்டு பயனர் என்றால் பழைய ஆன்ட்ராய்டு வெர்ஷனை அப்டேட் செய்துகொண்டால் உங்களால் மேலும் வாட்ஸ்அப்பின் அப்டேட்களை பெறமுடியும் எனவும் அறிவித்திருக்கிறது .

வாட்ஸ் அப்பின் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்ட இயங்குதளங்கள் :

*ஆன்ட்ராய்ட் 2.3.3 க்கு முந்தைய வெர்ஷன்கள்

*வின்டோஸ் போன் 8.0 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள்

*ஐபோன் 3 GS/ஐ .ஓ .எஸ் 6

*நோக்கியா ஸிம்பையன் S60

*ப்ளாக்பெர்ரி OS மற்றும் ப்ளாக்பெர்ரி 10

இந்த ஆண்டின் இறுதியோடு வாட்ஸ்அப் சேவைகளை நிறுத்திக் கொள்ளவிருக்கும் இயங்குதளங்கள் :

*நோக்கியா S40

*ஆன்ட்ராய்டு 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள் (2020 பிப்ரவரி 1 வரை செயல்படும்)

*ஐ .ஓ .எஸ் 7 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள் (2020 பிப்ரவரி 1 வரை செயல்படும்)

புதிய வெர்ஷன்களை அப்கிரேடு செய்துகொண்டால் வாட்ஸ்அப் வசதிகளைப் பெறும் இயங்குதளங்கள் :

*ஆன்ட்ராய்டு OS 4.0 மற்றும் அதற்கு அடுத்த வெர்ஷன்கள்

*ஐபோன் 8 மற்றும் அதற்கு அடுத்த வெர்ஷன்கள்

*வின்டோஸ் போன் 8.1 மற்றும் அதற்கு அடுத்த வெர்ஷன்கள்.

No views yet

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம்!

News Tamilnadu 17 hours ago

நெல்லையப்பர் கோயிலின் ஆனித் தேர்த்திருவிழாவின் கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இந்தக் கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டு வழிபட்டனர்.

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஆனித் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விழா 10 நாள்கள் நடைபெறும். இந்த விழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லையப்பர் சந்நிதியில் உள்ள பெரிய கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. இதையொட்டி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நெல்லையப்பர் கோயிலில் கொடியேற்றப்பட்டதால், தொடர்ச்சியாக கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு அம்பாளும் சுவாமியும் சப்பரத்தில் வீதி உலாவாக வர உள்ளனர். விழா நாள்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்க உள்ளது. அத்துடன், கோயிலில் உள்ள கலையரங்கில் பக்தி கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நெல்லையப்பர் கோயிலின் முக்கியத்துவம் வாய்ந்த தேரோட்ட நிகழ்ச்சி 9-ம் நாளில் நடக்க உள்ளது. 27-ம் தேதி காலை 9.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட இருக்கிறது. தேரோட்டத்தையொட்டி அன்று நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவுக்காக தேரை அழகுபடுத்தும் பணிகளும் சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தீயணைப்பு வாகனங்களின் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

நெல்லையப்பர் கோயிலின் ஆனித் திருவிழா தொடங்கியிருப்பதால் நெல்லை டவுன் முழுவதும் களைகட்டி இருக்கிறது. சாலைகளில் பக்தர்கள் கூட்டமாக கோயிலுக்குச் சென்று வருகிறார்கள். அதனால் நெல்லை ரதவீதிகளில் கனரக வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. போலீஸார் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்தும் கேமராக்கள் உதவியுடனும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

No views yet

Page 1 of 1351 2 3 135